ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதவினர்.
இந்நிலையில் தமிழ் சினிமவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது மிகவும் பெருந்தன்மையான விஷயம் என்று நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.