எஸ் ஜே சூர்யா சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர்.