நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு `கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.