தமிழ் மற்றும் மலையாள சினிமா திரையுலகில் மிகவும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராவார் வித்யாசாகர். மலையாள திரையுலகில் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இவர் மிகப்பெரியளவில் ஹிட்டான தமிழ் திரைப்படங்களான ஜெய் ஹிந்த், பூவெல்லாம் உன் வாசம், ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி, கில்லி, மொழி, என பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
வித்யாசாகர் தற்பொழுது முதல்முதலாக அஷ்ட ஐயப்ப அவதாரம் என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை இசையமைத்துள்ளார். இது முழுவதும் ஐயப்பனை பற்றி பாடும் மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுக்குறித்து தற்பொழுது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பம் விரைவில் சரிகமா சவுத் சிவோஷனல் சேனலில் வெளியாகவுள்ளது.