இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது.
விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.