என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் அமைச்சர் சேகர்பாபு - மு.க.ஸ்டாலின் புகழாரம்
    X

    ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் அமைச்சர் சேகர்பாபு - மு.க.ஸ்டாலின் புகழாரம்

    • கல்வி தான் கடைசி வரை துணையாக இருக்கும்.
    • கல்வியால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள்.

    சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.22.14 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் கொளத்தூர் தொகுதி ரங்கசாமி தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மேயர் முனுசாமி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    இதையடுத்து கொளத்தூர் தொகுதி சோமையா ராஜா தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்த முதலமைச்சர் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * அனிதா அகாடமி நிகழ்ச்சிக்கு வந்ததால் களைப்பு விடுபட்டு உற்சாகம் வந்துள்ளது.

    * ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் அமைச்சர் சேகர்பாபு.

    * கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

    * என் உடலில் உயிர் இருக்கும் வரை என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன்.

    * நான் இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம்.

    * கலைஞர் கற்றுத்தந்த உழைப்பை வைத்து உங்களுக்காக கடமையாற்றுவேன்.

    * தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைவரும் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * கல்வி தான் கடைசி வரை துணையாக இருக்கும்.

    * கல்வியால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள்.

    * கவர்ச்சியான வார்த்தைகளை கூறி பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள்.

    * உங்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். மறந்து விட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×