search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது
    • HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 உள்ளது.

    HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது . புதிய 'ஸ்மார்ட்போன்'களான HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் பல்ஸ் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் பல்ஸ் ப்ரோ மற்றும் பல்ஸ் பிளஸ் மாடல்களில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி606 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

    ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான பல்ஸ் 64 ஜிபி.  இந்த 3 செல்போன்களும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்க சேமிப்பகம் உள்ளன.




    இந்த செல்போன்கள் Android 14 இயக்க முறைமையில் இயங்குகின்றன, HMD இரண்டு முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு வழங்குகிறது. 

    பல்ஸ், பல்ஸ் பிளஸ் மற்றும் பல்ஸ் ப்ரோ அனைத்தும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன. பிளஸ் மாடல் 20W வேகமான சார்ஜிங் உள்ளது, அதே போல் பிளஸ் மாடல்கள் 10W சார்ஜிங் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைபை 5 (ஏசி), புளூடூத் 5.0 மற்றும் என்எப்சி போன்ற வசதிகள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்போன்கள் அதே 6.65-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இதில் 720p தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 நிட்கள் வரையிலான உச்ச பிரகாசம் ஆகியவை உள்ளன.  பல்ஸ் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது.




    பிளஸ் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 3:செல்போன்களிலும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும். பல்ஸ் மற்றும் பல்ஸ் பிளஸ் செல்போன்களில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன.

    அதே போல் பல்ஸ் ப்ரோ செல்பிக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த செல்போன்கள் எளிதில் பழுது பார்க்கும் தன்மை உடையது.



    HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 இந்தியாவில் விரைவில் கிடைக்க உள்ளது.

    • ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது. 

    • ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.

    ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S24 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் HD+ பன்ச் ஹோல் 90Hz டிஸ்ப்ளே, 480 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் பிளஸ், 128 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டைனமிக் பார் அம்சம் மிகமுக்கிய நோட்டிபிகேஷன்களை கேமரா கட்-அவுட் பகுதியில் காண்பிக்கும். இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா, EIS, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், மேம்பட்ட ஏ.ஐ. அம்சங்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐடெல் S24 அம்சங்கள்:

    6.6 இன்ச் HD+ 1612x720 பிக்சல் டிஸ்ப்ளே

    மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர்

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஐடெல் ஒ.எஸ். 13.5

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    3.5mm ஆடியோ ஜாக்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் சார்ஜிங் வசதி

    ஐடெல் S24 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் டான் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் டான் வைட் நிற வேரியண்ட் யு.வி. லைட் படும் போது பின்க் நிறத்திற்கு மாறிவிடும். இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

     


    இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.

    ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    • 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் ரெட்மி பேட் SE மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாடலில் 11 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     


    கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த டேப்லெட் கிராபைட் கிரே மற்றும் லாவெண்டர் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
    • அந்த ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

    நத்திங் நிறுவனத்தின் போன் (3) மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (3) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் மாடல் டெட்ரிஸ் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெயர் மற்றும் மாடல் நம்பர் தவிர ஸ்மார்ட்போனின் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் A015 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வெர்ஷனின் ஓவர்கிளாக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். பிராசஸர் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன.

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    • பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    • அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஸ்மாட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம். கேலக்சி மாடல் ஃபோன்கள் மற்றும் நோட் மாடல் ஃபோன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.



    இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    கேலக்சி மாடல் ஃபோன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


    இதன்படி கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் ஃபோன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற ஃபோன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதால் வாடிக்கையாளர்கள் இடையே ஏமாற்றமும் நிலவிவருகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் இருவித ரேம் ஆப்ஷன்களை கொண்டிருந்தது.
    • இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் Full HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போன் இருவித ரேம் ஆப்ஷன்களை கொண்டிருந்தது. இந்த நிலையில், கேலக்ஸி F15 5ஜி மாடலின் மூன்றாவது மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.




     

    கேலக்ஸி F15 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    ARM மாலி-G57 MC2 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    5MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ சென்சர், எல்.இ.டி. ஃபிளாஷ்

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி F15 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
    • ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு இறுதியில் ரி என்ட்ரி கொடுத்தது. ரிஎன்ட்ரியின் போது ஹானர் பிராண்டின் முதல் சாதனமாக ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதுதவிர வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் மாறிவிடும்.

    பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வயலெட் ஹைடெக் 30 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 699 ஆகும். இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் X9b மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 3.1 மெமரி, 6.78 இன்ச் பன்ச் ஹோல் கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 2652x1200 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 108MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 35 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. 2.0 டைப் சி போர்ட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
    • இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. 

    • புது இயர்பட்ஸ்-இல் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இயர்பட்களில் 46 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆடியோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஆடியோ சாதனங்கள் நத்திங் இயர் மற்றும் இயர் (a) என்று அழைக்கப்படுகின்றன. புதிய தலைமுறை இயர்பட்ஸ் மாடல்களில் நத்திங் நிறுவனத்தின் பிரபலமான டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ் டிசைன் நத்திங் இயர் 2 மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் மாடலில் 11 மில்லிமீட்டர் அளவு கொண்ட டிரைவர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் LHDC 5.2 மற்றும் LDAC கோடெக் வசதி, ANC வசதி உள்ளது. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் நீண்ட நேர பேக்கப் வழங்குகிறது.

     


    நத்திங் இயர் (a) மாடலிலும் ANC வசதி, நத்திங் இயர் மாடலை போன்ற டிசைன் மெல்லிய ஃபிரேம், ப்ளூடூத் 5.3, LDAC கோடெக் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் இயர் (a) மாடலின் கேஸ் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இதன் இயர்பட்களில் 46 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    முற்றிலும் புதிய நத்திங் இயர் மற்றும் இயர் (a) மாடல்களின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 7 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் விற்பனை ஏப்ரல் 22 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ×