என் மலர்
நீங்கள் தேடியது "Rashid Khan"
- பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன்.
- முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 20 ஓவர் போட்டி அணி கேப்டன் ரஷீத்கான் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டு மிராண்டித்தனமானது. பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார். அதேபோல் முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.
அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட்லீயின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.
அபுதாபி:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் டி20 150-க்கு கூடுதலான விக்கெட்டும் ஒருநாளில் 200-க்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய வீரராவார்.
ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தில் ரஷித்கான் உள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் சவுத்தி 174 டி20 விக்கெட்டும் 221 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீயின் சாதனையையும் ரஷித் கான் முறியடித்துள்ளார். குறைந்த ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் (101 போட்டிகள்), ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் (102 போட்டிகள்), இந்திய வீரர் முகமது ஷமி (103 போட்டிகள்) நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (106 போட்டிகள்) ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (107 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர்.
- ஓமர்சாய், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியால் 221 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஓமர்சார், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 48.5 ஓவரில் ஆல்அவுட் ஆனது.
வங்கதேச அணியின் முதல் மூன்று வீரர்கள் சைஃப் ஹசன் (26), தன்சித் ஹசன் (10), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர். இதனால் வங்கதேச அணி 221 ரன்கள் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
- ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
- 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
- லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.
ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம்.
- நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ரஷித் கான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் எடுக்க கூட முடியாமல் திணறினார். மேலும் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் பெற்றுக் கொண்டேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது. பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன்.
அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன். அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்.
என்று ரஷித் கான் கூறினார்.
- அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
- இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.
நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.
மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.

அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ரஷித் கான் ஓவரை பறக்க விட்ட பிரையன் லாரா- வைரலாகும் வீடியோ#BrianLara #RashidKhan pic.twitter.com/uDsEBTeWv1
— Maalai Malar தமிழ் (@maalaimalar) December 12, 2022
24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.
அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.
- ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
- ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.
டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.
2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார்.
- இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
- பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.
ஜோகன்ஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.
டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது.
- இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்த முடிந்த நிலையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இவ்விரு அணிகள் மோதிய டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரையே கைப்பற்றி ஆப்கானிஸ்தான் ஏற்கனவே புதிய வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டு கொடுக்காமல் ரஷித்கான் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரஷித் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.
இதனால் தொடர்ச்சியாக 106 பந்துகளில் பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார். 2 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியது முடிவுக்கு வந்துள்ளது.






