என் மலர்
நீங்கள் தேடியது "Stickle Chop"
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47), விவசாயி.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (65) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரண்டு குடும்பத்திற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சரமாரி அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.
பலத்த காயமடைந்த கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருப்பசாமி தேவர்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 29). இவரது தம்பி சுடலைமுத்து (27). இவர்கள் நேற்று முன்தினம் பட்டாசு வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றனர்.
அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து அங்கு டீக்கடை நடத்தி வரும் முத்தையா என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவரது கடைக்கு சென்ற மாரிச்செல்ம் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் எப்படி போலீசில் புகார் செய்யலாம் என கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தையா இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.