search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
    • கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெயிலர் நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தற்பொழுது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
    • இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், ஸ்ரீஇனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்

    2012 ஆம் ஆண்டு வெளியான தத்தத்தின் மறையத்து படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் நிவின் பாலி. அதைத் தொடர்ந்து நேரம், ஓம் ஷாந்தி ஒசன்னா, பெங்களூர் டேஸ் படங்களில் நடித்து மக்கள் அமந்தை வென்றார்.

    2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்தார், இப்படம் தமிழக ரசிகர்களின் அன்பை நிவின் பாலிக்கு பெற்றுக் கொடுத்தது. சமீப காலத்தில் அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க்வில்லை.

    ஏப்ரல் 11 ஆம் தேதி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவரின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேறபை பெற்றது. அதை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

    ஆல்பரம்பில் கோபி என்பவன் வேலையில்லாமல் இருக்கிறான் அவன் எதிர்பாராத விதாமான் ஒரு பயணத்தில் ஈடுபடுகிறான். அதனால் அவனுடைய வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், ஸ்ரீனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் நிவின் பாலியின் ஜூனியர் பிகசர்ஸ் தயாரித்துள்ளது. படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.
    • ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராகவா லாரன்ஸ்-க்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

    ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போகிறார். அதில் அவர் படிக்க வைத்த பல இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய போகிறோம் என்ற கூறி ஒரு வீடியோவை வெளியிட்டனர் அதை ராகவா லார்ன்ஸ் அவரது எக்ஸ் பகக்த்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இந்த மாற்றம் அமைப்பில் சேர்ந்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும், மே 1 மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய கூறினாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர் என்று ஜிகர்தண்டா படத்தின் வசனத்தையும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
    • விழாவில் அனிருத், இந்த பாடல்களை பாட உள்ளார். இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் 'இந்தியன்'. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.

    இப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.இதில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.





    இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத், இந்த பாடல்களை நேரடியாக பாட உள்ளார். இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.




    மேலும் வருகிற மே முதல் வாரத்தில் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
    • அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

    அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கவுதம் தினனுரி இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போன அன்பறிவு மாஸ்டர் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கையாளுகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் கைதி படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமாகும். படம் 1500 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.

    அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினர். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார்.

    இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நயன்தாரா ஃபீமேல் செண்டிரிக்காக நடித்த பல படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர்.

    சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது " சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான தேர்வு மட்டுமல்ல அவர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கான குரலாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்". என கூறினார்.

    அடுத்ததாக மாதவன் மற்றும் சித்தார்த் நடித்து இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் மன்னாங்கட்டி சின்ஸ் 1960 படத்திலும் நடித்து வருகிறார்.

    படத்தில் மட்டும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசாமல், நிஜத்திலும் அவர் செய்து கொண்டு இருக்கிறார்., அவர் சமீபத்தில் அவரின் கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9 ஸ்கின் என்ற ஸ்கின்கேர் பிராண்டையும், ஃபெமி 9 சானிட்டரி நேப்கின் பிராண்டையும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
    • அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்யில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.



    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் அஜித்தின் பில்லா, மங்காத்தா படங்களும் 'ரீ ரிலீஸ்' ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.




    அன்றைய தினம் தியேட்டர்களில் அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
    • இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.. இப்படம் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்றது. ஏப்ரல் 28 ஆம் தேதி { இன்று} 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் " மா இண்டி பங்காரம்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏப்ரல் 28 சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா.  முதன்முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவரது முன்னாள் கணவனான நாக சைத்தன்யாவுடன் இணைந்து 'யே மாயா சேசாவே' என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சில நாட்களுக்கு முன் அவர் கலந்துக் கொண்ட 'எல்லே சஸ்டெயினபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் அவர் கருப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அவரது திருமண கவுனை மறு ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறத்தில் மாற்றி அணிந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    ஏப்ரல் 28 { இன்று} சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலமான சமந்தா, சின்மயி , விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
    • படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி எப்பொழுதும் நல்ல இயக்குனர்களையும் , நல்ல படைப்புகளையும் பாராட்டுவது அவரின் இயல்பு. அதேப் போல் இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை நேற்று அவரது அலுவலகத்திற்கு சென்று படம் வெளியாவதையொட்டி வாழ்த்துகளை பெற்றனர்.

    இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் சூது கவ்வும் -2 படத்தின் முன்னோட்டத்தை விஜய் சேதுபதியிடம் காண்பித்து அது அவருக்கு பிடித்ததாக கூறியுள்ளார். படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும்
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும்

    பிரபல நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

    இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.புதுச்சேரி, கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடந்தது.





    இப்படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள், அதிக 'லைக்', பார்வைகள் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.




    மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

    டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். நேற்று ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.

    நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் கல்லூரி பருவத்ஹின் முதல் வயது முதிர்ந்த காலம் வரை டிரெயிலரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவன் நடிகராக முயற்சிக்கும் பயணத்தில் அவன் படும் அவமானங்கள் , துக்கங்கள், காதல் இழப்பு, நடிபு பிறிவு, சமூகத்தில் மதிக்காமல் போவது, பணமில்லாமல் சுற்றுவது என பல காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது.

    கவின் டிரெயிலரில் வரும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியுள்ளார். கோபம், இயலாமை, காதல் என நடிப்பை வேறுபடுத்தி காட்டியுள்ளார். சமீப காலத்தில் வெளிவந்த டிரெயிலர்களில் மிக சிறந்த டிரெயிலராக ஸ்டார் படத்தின் டிரெயிலர் அமைந்துள்ளது. அதனால் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    டிரெயிலரை பார்த்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் " ஸ்டார் படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே உடனே படத்தை பார்க்க வேண்டும்போல் இருந்தது. காட்சிகள், தோற்றம் என அனைத்தும் ஈர்க்கிறது. இது ஒரு நல்ல படம் எனத் தோன்றுகிறது" என கூறியுள்ளார்.

    படத்தை உதயநிதி பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×