என் மலர்
உலகம்
- தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.
தைபே:
தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. கடைகள் மற்றும் வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து சிதறிக் கிடந்தன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
- சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அறியப்படுபவர்.
- பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
லண்டன்:
இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்தது.
இதற்கிடையே, நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
'பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன்' என்ற போராட்டக் குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்தது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஒரு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
- மற்ற முக்கிய பிரச்சினைகளையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிகாரிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனின் சில பகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ரஷிய அதிபர் உறுதியாக உள்ளார். அதேவேளையில் தங்களது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
இதனைத் தவிர்த்து பல்வேறு விசயங்கள் குறித்து உக்ரைனுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் பல பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
20 அம்சங்கள் கொண்டு திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாரத்தான் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர், ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ரஷியா இது குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கவில்லை.
டான்பாசில் உள்ள மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பது ரஷியாவின் அதிகப்பட்ச கோரிக்கையாகும். இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீத பகுதியையும் ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
- ஒரு குடியிருப்பில் ஹிமான்ஷி குரானா பிணமாக கிடந்தார்.
- டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி(32) என்பவரை குற்றவாளியாக அறிவித்து தேடி வருகிறார்கள்.
கனடாவின் டொராண்டோவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணான ஹிமான்ஷி குரானா(வயது 30) திடீரென்று மாயமானார். இதற்கிடையே அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஹிமான்ஷி குரானா பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் கூறும்போது, ஹிமான்ஷி குரானா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஹிமான்ஷி குரானா கொலையில் சந்தேக நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட்டனர். டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி(32) என்பவரை குற்றவாளியாக அறிவித்து தேடி வருகிறார்கள்.
- முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
இந்தநிலையில் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் உமர் ஹாடி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது சகோதரர் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம். அவரை கொன்றுவிட்டு அதை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய விரும்புகிறீர்கள். பொதுத் தேர்தலை சீர்குலைப்பதற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டது.
தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படு வதை உறுதி செய்யுங்கள். ஆனால் அரசாங்கம் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் செய்யவில்லை. ஷெரீப் உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
- கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை இந்தியர்கள் அதிகளவில் பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் எச்-1பி விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.89 லட்சம்) கட்டணமாக வசூ லிக்கப்படும் என்று டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.
மேலும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது போன்ற தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் எச்-1பி விசா நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
அந்த எண்ணிக்கையை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறை கடைபிடிக்கப்படும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குலுக்கல் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை கூறியதாவது:-
எச்-1பி குலுக்கல் முறை ரத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி முதல் அமலுக்கு வரும். தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்ற வா்களைக் குறைந்த சம்பளத்தில் பணியமா்த்த இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.
புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவா்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது. மேலும் , இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும் போது, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதன்மூலம், அமெரிக்கக் குடிமக்களின் வேலை வாய்ப்பும், ஊதிய உயா்வும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறியது.
- காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளிக்கும் சூர்யா முராங், இரவில் விசித்திரமாக மாறுவார்.
இந்தோனேசியாவில் உள்ள முராங் குடும்பத்தின் கதையை நீங்கள் அறிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். முராங் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள் பகலில் ஒன்று, இரவில் மற்றொன்று என மாறுகின்றன. உள்ளூர்வாசிகள் அவற்றைப் பல்லிகளாகக் கருதுகிறார்கள்.
இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த சூர்யா முராங் என்ற மனிதர் 12 வயது வரை நன்றாக இருந்தார். இருப்பினும், அவருக்கு 12 வயது ஆன பிறகு, அவரிடம் விசித்திரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அவரது முகபாவனைகள் மாறத் தொடங்கின. அவரது கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறியது.
காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளிக்கும் சூர்யா முராங், இரவில் விசித்திரமாக மாறுவார்.
இந்த நிலை சூர்யாவுக்கு மட்டுமல்ல. அவரது குழந்தைகளுக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜாம்பெல்லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாஷிங்டன்:
உலகில் அதிகம் விற்பனையாகும் கால் ஆப் டூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கியவர்களில் ஒருவர் வின்ஸ் ஜாம்பெல்லா (55).
இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கிய ஜாம்பெல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த மற்றொருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜாம்பெல்லா மெடல் ஆப் ஹானர் உள்ளிட்ட கேம்களை தயாரித்து உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
- வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்றார்.
நியூயார்க்:
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நிருபர்கள் வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
வங்கதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணர வேண்டும்.
ஒவ்வொரு வங்கதேசத்தவரும் தங்களைப் பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
- துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி அங்கிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.
அங்காரா:
துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் சென்றார்.
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.
- ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வழங்குவதில் மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு.
- கடன் தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு.
மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்திய அரசு அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும் இந்திய அரசை விமர்சித்து லலித் மோடி அடிக்கடி வீடியோ வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி கலந்து கொண்டுள்ளார்.
அப்போது லலித் மோடி, நாங்கள் இரண்டு தப்பி ஓடியவர்கள். இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் எனப் பேசுவது போன்ற வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இணைய தளம் ஸ்தம்பிக்கும் வகையில் மீண்டும் ஏதோ ஒன்றை செய்யப் போகிறேன். இது உங்களுக்காகத்தான். பொறாமையால் உங்களுடைய இதயம் புழுங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகள் வழங்குவது தொடர்பான மோசடி மற்றும் பண மோசடியில் லலித் மோடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 125 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லலித் மோடி தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். இவர் தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.






