search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கன்னட நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 30. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது.
    • விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில் நடித்துள்ளார்.

    போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது.இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் விமல் அடுத்ததாக தனது 35 வது திரைப்படமாக பெல்லாடோனா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    விமலில் 34- வது திரைப்படமாக பரமசிவன் ஃபாதிமா படத்தில்  நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று விஜய் சேதுபதி அவரது எக்ஸ் பக்கதில் வெளியிட்டார். இப்படத்தை இசக்கி கர்வண்னன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் குடிமகன், பெட்டிக்கடை மற்றும் பகிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இரு மதத்தினருக்கும் உள்ள வேறுபாடை சுட்டிக்காட்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படம் ஒரு மலைக்கிராமத்தில் இரு மதத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

    விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
    • இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அஜய் தேவ்கன் நடிக்கும் தி தி ப்யார் தி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சம்பவத்தை பற்றி பதிவிட்டு இருந்தார் அதில் அவர் " நான் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜிம்மில் 80 கிலோ எடையை வைத்து டெட் லிஃப்ட் செய்தேன். அதை தூக்கும் பொழுது எனது கீழ் முதுகு தண்டில் சிரிய வலி ஏற்ப்பட்டது ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் அதை தூக்கினேன் அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. உடற்பயிற்சி முடித்த பிறகு நேராக ஷூட்டிங்கிற்கு சென்றேன். அன்று மாலை எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது என்னால் குணிந்து என் உடையைக்கூட அணிய முடியவில்லை. தசை பிடிப்பு தானே சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால் அக்டோபர் 10 ஆம் தேதி என் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் பொழுது திடீர் என் இடுப்பின் கீழ் உள்ள பகுதி என்னை விட்டு பிரிந்தது போல ஒரு உணர்வு. நான் மயங்கினேன். 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். நான் இன்னும் பூர்ண குணமடையவில்லை. நாட்கள் கடக்க கடக்க அது சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியானது 'சூது கவ்வும்' திரைப்படம்.
    • 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

    ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

    'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம்  வரும் 13-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனமாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார்.
    • ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். கடந்த மாதம் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் தயால் என்ற சைக்கோ காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.

    ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர். இப்பட்டத்தினை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பட்டத்தை வழங்கினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றது
    • சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

    கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஜெயம் ரவி, அதர்வா, ரோஷன் மாதியூ படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்ப்படுகிறது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
    • புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனாமடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • சில நாட்களுக்கு முன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். நீண்ட நாட்கள் அப்டேட் ஏதுமின்றி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக. அதை படக்குழு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'.
    • திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முடிவடைந்துள்ளது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார்.

    'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இவர்களுடன் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முடிவடைந்துள்ளது. இதனை குறித்து பிருத்விராஜ் குறிப்பிடுகையில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மலம்புழா நீர்த்தேக்கத்தில் படத்தின் இறுதி ஷாட்டை படம்பிடித்து முடித்தோம். இன்னும் 117 நாட்களில் திரையரங்கில் சந்திப்போம். என பதிவிட்டுள்ளார்.

    திரைப்படம் சொன்ன தேதியில் வெளிவருவதை உறுதி செய்ய புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
    • புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி இந்தப் படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

    இதனிடையே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் அதிக வசூல் செய்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஸ்ரேயஸ் தால்பேட் டப்பிங் செய்துள்ளார்.

    இது குறித்து பேசிய அல்லு அர்ஜூன், இனி இந்தி படங்களில் நடிக்கவே கூடாது என முடிவு செய்துள்ளேன். அது மிகவும் கடினமாக இருக்கிறது. என் வாழ்நாளில் ஒன்றிரண்டு இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர்.
    • அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்தது

    இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50 வது படம் ஆகும்.

    இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

     

     

    இதற்கிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் 40,000 திரைகளில் நேற்று முன்தினம் [நவம்பர் 29] வெளியாகியுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் நாள் வசூலாக மகாராஜா ரூ. 5 கோடி எட்டியுள்ளது. சிறப்பு திரையிடலுடன் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் ஆகியுள்ளது.

     

    அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்து நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எழுத்துள்ளது.

    ×