search icon
என் மலர்tooltip icon

    பைக்

    • இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • தற்போது இந்த பைக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளாக்ஷிப் ஸ்போர்ட் பைக் மாடலான நின்ஜா ZX-10R விலையை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் குறைந்துள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து நின்ஜா ZX-10R விலை தற்போது ரூ. 17 லட்சத்து 34 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    2025 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 50 ஆயிரம் என மாறியது. இந்த நிலையில் தான் தற்போது நின்ஜா ZX-10R விலை குறைக்கப்பட்டுள்ளது.

     


    கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளில் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரக்ஷனல் குயிக்-ஷிப்டர் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்கில் டிஎப்டி கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பல்வேறு ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • 2025 கவாசகி நின்ஜா ZX 4RR 3 நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கில் 399 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

    கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நின்ஜா ZX 4RR மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 42 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. சமீபத்தில் இந்த பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டது.

    2025 நின்ஜா ZX 4RR மாடல்- கிரீன் / எபோனி / பிலிசர்டு வைட் என புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கின் விலை 2024 வெர்ஷனை விட ரூ. 32 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

     


    கவாசகி நின்ஜா ZX 4RR மாடலில் 399 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை கூர்மையான ஃபேரிங், டுவின் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்- ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2025 கவாசகி நின்ஜா ZX 4RR மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    • அறிவிப்பின் படி ரூ.30,000 வரையான பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • Ola S1 பிரிவின் மீது ரூ.25,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய பிரத்தியேக EV நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் விழாக்கால சீசனையொட்டி மிகப்பெரிய ஓலா சீசன் சேல் திட்டமான BOSS சலுகைகளின் ஒரு அங்கமாக ஒரு "72 மணிநேர ரஷ்" அறிவித்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் S1 பிரிவின் மீது ரூ.25,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் ரூ.30,000 வரையிலான கூடுதல் நன்மைகளை ஸ்கூட்டர்கள் மீதும் பெற முடியும். எனவே ஒரு மின்சார ஸ்கூட்டருக்கு மாறுவதற்கான சிறந்த நேரம் இப்போது வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை 31 அக்டோபர், 2024 வரை பெற்று மகிழலாம்.

     

     

    'BOSS' திட்டத்தின் கீழ் ஓலா நிறுவனம் பின்வரும் நன்மைகளை வழங்கும்:

    ●BOSS விலைகள்: ஓலா S1 பிரிவின் தொடக்க விலை வெறும் ரூ.74,999 மட்டுமே

    ●BOSS டிஸ்கவுன்டுகள்: ஒட்டுமொத்த பிரிவுக்கென ரூ.25,000 வரை தள்ளுபடி

    ●ரூ.30,000 வரையான BOSS கூடுதல் நன்மைகள்

    BOSS உத்தரவாதம்: இலவச 8-ஆண்டு/80,000 கிமீ, ரூ.7,000 மதிப்பிலான பேட்டரி உத்தரவாதம்

    BOSS ஃபைனான்ஸ் சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்ட் EMIக்களின் மீது ரூ.5,000 வரையான ஃபைனான்ஸ் நன்மைகள்

    BOSS நன்மைகள்: ரூ.6,000 வரையான இலவச MoveOS+ மேம்படுத்தல்,ரூ.7,000 வரையான இலவச சார்ஜிங் கிரெடிட்டுகள்

    BOSS எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்: S1 பிரிவின் மீது ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்

    ஓலா எலெக்ட்ரிக் ஆனது ஆறு வகைகளுடன் கூடிய ஒரு பரந்த S1 பிரிவை கவர்ச்சிகரமான விலைகளில் வழங்குகிறது மற்றும் இவை பல்வேறு ரேஞ் தேவைகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

    பிரீமியம் வாகனங்களான S1 ப்ரோ மற்றும் S1 ஏர் ஆனவை முறையே ரூ.1,14,999 மற்றும் ரூ.1,07,499 என்ற விலைகளில் கிடைக்கும். அதே வேளையில் , வெகுஜன வாகனங்களான S1 X பிரிவு (2 kWh, 3 kWh, மற்றும் 4 kWh) முறையே ரூ.74,999, ரூ.77,999, மற்றும் ரூ.91,999, என்ற விலைகளில் கிடைக்கின்றன.

    அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் EV ஊடுருவலை அதிகரிப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய மற்றும் உரிமை அனுபவத்தை மேம்படுத்துவது என்ற தெளிவான நோக்கங்களுடன் ஓலா எலெக்ட்ரிக் கடந்த ஒருசில வாரங்களில் முன்னெடுப்புகளின் ஒரு தொடரை அறிவித்தது.

    தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும், பெஸ்ட்-இன்-கிளாஸ் விற்பனைக்கு பிந்தைய அனுபவத்தை வழங்கும் முனைப்புடன் நிறுவனமானது #HyperService விளம்பர முயற்சியை அதிரடியாக தொடங்கியது. இந்த முயற்சியின் ஒரு அங்கமாக நிறுவனமானது தனது நிறுவனத்துக்கு சொந்தமான சேவை நெட்வொர்க்கை டிசம்பர் 2024-க்குள் 1,000 மையங்கள் என்றளவில் இரட்டிப்பாக்கும்.

     


    கூடுதலாக, தன் நெட்வொர்க் பார்ட்னர் திட்டத்தின் ஒரு அங்கமாக நிறுவனமானது 10,000 பார்ட்னர்களை விற்பனை மற்றும் சேவை ஆகியவற்றின் முழுதும் 2025-ன் இறுதிக்குள் வரவேற்கும். மேலும் இந்நிறுவனம் இந்தியா முழுதுமுள்ள 1 லட்சம் மூன்றாம்-தரப்பு மெக்கானிக்குகள் EV பராமரிப்பில் திறன் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் EV செர்விஸ் பயிற்சி திட்டத்தையும் அறிவித்தது.

    ஆகஸ்ட் 2024 இல் தனது வருடாந்திர 'சங்கல்ப்' நிகழ்வில், Roadster X (2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh), Roadster (3.5 kWh, 4.5 kWh, 6 kWh) மற்றும் Roadster ஆகியவற்றை உள்ளடக்கிய Roadster புரோ (8 kWh, 16 kWh). மோட்டார்சைக்கிள் சீரிசை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்தது.

    மோட்டார்சைக்கிள்கள் பல பிரிவு-முதல் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்களை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் முறையே ரூ. 74,999, ரூ. 1,04,999 மற்றும் ரூ. 1,99,999 முதல் தொடங்குகின்றன.

    • ஸ்கிராம்ப்லர் ரக மாடலுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டுள்ளது.
    • வீல் அளவுகளும் வித்தியாசமாக உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் பியர் 650 மோட்டார்சைக்கிள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் இன்டர்செப்டார் 650 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பைக் ஸ்கிராம்ப்லர் ரக மாடலுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டுள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை பியர் 650 மோட்டார்சைக்கிள் பெயின்ட், எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் டயர்கள் அசத்தலான தோற்றத்தை வழங்கியுள்ளன. இத்துடன் ஸ்கிராம்ப்லர் ரக சீட் மற்றும் பக்கவாட்டில் நம்பர் போர்டு உள்ளது. பைக்கில் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வீல் அளவுகளும் வித்தியாசமாக உள்ளது.

    பியர் 650 மாடலில் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சஸ்பென்ஷன், இன்டர்செப்டார் மாடலில் உள்ளதை விட உயரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் சீட்-இன் உயரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர பைக்கின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அந்த வகையில் இந்த பைக் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., பின்புற ஏ.பி.எஸ்.-ஐ விரும்பினால் ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் கலர் டி.எப்.டி. ஸ்கிரீன், இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்டர்செப்டார் பியர் 650 மாடலிலும் 650சிசி பேரலெல் டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 47 ஹெச்பி பவர், 57 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய டு-இன்டு எகாச்ஸ்ட் சிஸ்டம் உள்ளது.

    ராயல் என்பீல்டின் புதிய இன்டர்செப்டார் பியர் 650 மோட்டார்சைக்கிள் பிராட்வாக் வைட், பெட்ரோல் கிரீன், வைல்டு ஹனி, கோல்டன் ஷேடோ மற்றும் டூ ஃபோர் நைன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஒவ்வொரு நிறத்தின் விலையும் வித்தியாசமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல்.
    • ஜூப்பிட்டர் அல்லது XL மாடல்களில் ஒன்று எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    டி.வி.எஸ். நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் இருவாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் டி.வி.எஸ். தனது புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் சமீபத்திய முதலீட்டாளர் சந்திப்பின் போது வெளியாகியுள்ளது. தற்போதைக்கு டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் மாடலை மட்டும் பல வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் ஓரளவுக்கு சந்தையில் வெற்றிகர மாடலாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எக்ஸ் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. டி.வி.எஸ். எக்ஸ் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் கவர்ச்சிகரமாக இருந்தது. இது விற்பனையில் அமோக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     


    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளையும் டி.வி.எஸ். துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதில் ஜூப்பிட்டர் அல்லது XL எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் ஒன்றை டி.வி.எஸ். முதலில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் XL எலெக்ட்ரிக் மாடல் வணிக பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ட.வி.எஸ். நிறுவனம் XL EV மற்றும் E-XL பெயர்களை புதிய மாடலுக்கு சூட்ட டிரேட்மார்க் செய்துள்ளது.

    • ஓலா எலெக்ட்ரிக், பண்டிகைக் காலத்திற்கான மிகப்பெரிய ஓலா சீசன் விற்பனை அறிவிப்பு.
    • இது, எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    இந்தியாவின் மிகப்பெரிய பியூர்-பிளே EV நிறுவனமான Ola Electric, பண்டிகைக் காலத்திற்கான அதன் மிகப்பெரிய Ola சீசன் விற்பனை விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய 'BOSS' சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் S1 போர்ட்ஃபோலியோவில் ₹ 20,000 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம் மற்றும் ஸ்கூட்டர்களில் ₹ 25,000 வரை மதிப்புள்ள கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இது, EVக்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    'BOSS' விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ், நிறுவனம் பின்வரும் நன்மைகளை வழங்கும்:

    ● BOSS விலைகள் : Ola S1 போர்ட்ஃபோலியோ வெறும் ரூ. 74,999ல் தொடங்குகிறது.

    ● BOSS தள்ளுபடிகள் : முழு S1 போர்ட் ஃபோலியோவில் ரூ. 20,000 வரை கிடைக்கும்.

    ரூ. 25,000 வரையிலான கூடுதல் BOSS நன்மைகள் :

    'BOSS' உத்தரவாதம் : ரூ.7,000 மதிப்புள்ள இலவச 8 ஆண்டுகள்/80,000 கி.மீ பேட்டரி உத்தரவாதம்.

    'BOSS' ஃபைனான்ஸ் சலுகைகள் : தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMIகளில் ரூ.5,000 வரையிலான நிதிச் சலுகைகள்.

    BOSS நன்மைகள் : ரூ.6,000 மதிப்புள்ள இலவச MoveOS+ மேம்படுத்தல்; ரூ.7,000 வரையிலான மதிப்புள்ள இலவச சார்ஜிங் கிரெடிட்கள். 

    Ola Electric ஆனது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வரம்புத் தேவைகளைக் கொண்ட கவர்ச்சிகரமான விலைப் புள்ளிகளில் ஆறு சலுகைகளுடன் விரிவான S1 போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. பிரீமியம் சலுகைகளான S1 Pro மற்றும் S1 Air ஆகியவை முறையே ரூ.1,34,999 மற்றும் ரூ.1,07,499 விலையில் கிடைக்கின்றன. மாஸ் மார்க்கெட் சலுகைகளில் S1 X போர்ட்ஃபோலியோ (2 kWh, 3 kWh மற்றும் 4 kWh) முறையே ரூ.74,999, ரூ.87,999 மற்றும் ரூ.101,999 விலைகளில் கிடைக்கின்றன.

    Ola Electric சமீபத்தில் #HyperService விளம்பரப் பிரச்சாரத்தை அறிவித்தது. இதன் கீழ், நிறுவனம் தனது சேவை வலையமைப்பை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மையங்களாக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, இந்தியா முழுவதும் அதன் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்த நெட்வொர்க் பார்ட்னர் திட்டத்தையும் அறிவித்தது. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓலா எலெக்ட்ரிக் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க்கை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மெக்கானிக்கையும் EV-க்கு தயார்படுத்த ஒரு லட்சம் மூன்றாம் தரப்பு மெக்கானிக்களுக்கு பயிற்சி அளிக்கும்.

    ஆகஸ்ட் 2024 இல் தனது வருடாந்திர 'சங்கல்ப்' நிகழ்வில், Roadster X (2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh), Roadster (3.5 kWh, 4.5 kWh, 6 kWh) மற்றும் Roadster ஆகியவற்றை உள்ளடக்கிய Roadster புரோ (8 kWh, 16 kWh). மோட்டார் சைக்கிள் தொடரை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்தது. மோட்டார்சைக்கிள்கள் பல பிரிவு-முதல் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்களை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் முறையே INR 74,999, INR 1,04,999 மற்றும் INR 1,99,999 முதல் தொடங்குகின்றன.

    • காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தன.
    • எலெக்ட்ரிக் பைக் அதிநவீன ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்டிருக்கும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குகிறது. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    நவம்பர் மாதம் 2024 EICMA விழா துவங்கும் முன் ராயல் என்பீல்டு தனது எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்கிறது. புதிய எலெக்ட்ரிக் பைக் தொடர்பான காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தன.

     


    அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அதிநவீன ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது. இந்த மாடலில் கிளாசிக் சீரிஸ் பைக்-ஐ நினைவூட்டும் பாகங்கள் அதிகளவில் இடம்பெறும் என்றும் தெரியவந்துள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக திறன் கொண்ட பேட்டரி, நீண்ட ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் வழங்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றி எந்த தகவலும் இல்லை.

    • எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும்.
    • ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த சலுகைகளின் படி ஏத்தர் 450X ப்ரோ பேக் வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும்.

    இத்துடன் ஒரு வருடத்திற்கு ஏத்தர் சார்ஜிங் க்ரிட் பயன்படுத்தும் வசதியை பெறலாம். தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.

     


    இந்திய சந்தையில் ஏத்தர் நிறுவனம் தற்போது- 450S, 450X, 450 அபெக்ஸ் மற்றும் ரிஸ்டா என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ரிஸ்டா மாடலை ஏத்தர் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான டிசைன் கொண்டுள்ளது.  

    • விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும்.
    • இந்த ஸ்கூட்டரின் உண்மை விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி ஓலா S1 X மாடல் ரூ. 49 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைப்பு ஓலா S1 X 2 கிலோவாட் ஹவர் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனையின் கீழ் இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

    • புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக் 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளின் ஆல்-பிளாக் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ரேடியான் மாடலின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். அந்த வகையில், இந்த வேரியண்ட் விலை ரூ. 59 ஆயிரத்து 880, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டிவிஎஸ் ரேடியான் மாடல் தற்போது மூன்று (பேஸ், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க்) வெவ்வேறு வேரியண்ட்கள் மற்றும் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் கொண்ட வேரியண்ட் கிளாஸ் பிளாக் ஃபினிஷ், வைட் இன்சர்ட்களை கொண்டிருக்கிறது.

     


    இத்துடன் டிவிஎஸ் மற்றும் ரேடியான் பேட்ஜிங் கான்டிராஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஒட்டுமொத்தோற்றம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் கவர் மட்டும் பிரான்ஸிஷ் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.

    மற்ற ரேடியான் மாடல்களில் உள்ளதை போன்ற 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது.

    • விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது.
    • இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ரோனின் எஸ்எஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த பைக்கின் ஃபிரேமில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனேஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த பைக் மோனோடேன் நிற ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பைக்கின் டாப் எண்ட் வேரியண்ட்கள் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
    • தென்னிந்தியாவில் 50 லட்சம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனை செய்ய 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    தென்னிந்தியாவில் 1 கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.

    2017 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் 50 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த இலக்கை எட்ட அந்நிறுவனத்திற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    அதே சமயம் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டியை விற்க 7 ஆண்டுகள் மட்டுமே அந்நிறுவனத்திற்கு தேவைபட்டுள்ளது. 

    ×