மாலைமலர் முழுமையாக வளர்ச்சி அடைந்த தமிழ் மாலை நாளிதழ். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகர்கோவில், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து பதிப்புகள் வெளியாகின்றன.
மாலைமலரின் உள்ளூர் தேசிய ,மற்றும் பன்னாட்டு செய்திகளில் தரம் மற்றும் அளவு எல்லா தரப்பினராலும் அங்கீகரிக்கபட்டதும் பாரட்டப்பட்டதும் ஆகும்.
மாலைமலர் செய்திகளை வசீகரமான வார்த்தைகளால் பிரசுரிப்பதோடு பல வண்ண புகைப்படங்களாகவும் வழங்குகிறது. இதனாலேயே இதனோடு ஆரம்பிக்கபட்ட மற்ற மாலை நாளிதழ்களை விட வாசகர்களிடையே தனி மதிப்பை பெற்று உள்ளது.
மாலைமலர் இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், நிபுணர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் சுவரஸ்யமான செய்திகளை தாங்கி வருகிறது.
இந்த விஷயங்கள் கீழ்கண்ட வண்ண இணைப்புகளின் வாயிலாக வாரந்தோறும் வழங்கபடுகிறது.
ஞாயிறு - சினிமா பக்கம் மற்றும் ஜோதிட மலர்
வியாழன் - சினிமா
வெள்ளி - டி.வி பூங்கா
தமிழகத்தின் 8 முக்கியமான நகரங்களில் இருந்து வெளிவரும் மாலைமலர் தமிழ் மாலை நாளிதழ்களில் அதிக விற்பனையாகும் நாளிதழ் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது.
மாலைமலரின் வாசகர் எண்ணிக்கை 31 லட்சத்து 60 ஆயிரம். இதுவே மாலை தமிழ் நாளிதழ்களில் மிக அதிக எண்ணிக்கை உடையது.
தமிழகம், புதுவை, மற்றும் கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகளில் செய்திகளை முழுமையாகவும் விரிவாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் முதன்மை பெற்று உள்ளது.
மாலைமலர் 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இணைய தளத்தின் மூலம் தனது செய்தி சேவையை தொடங்கியது.
இணைய தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிவருகிறது.
செய்திகள், சினிமா செய்திகள், ஜோதிடம், கதைகள், கவிதைகள், பெண்கள் பகுதி, புகைப்பட ஆல்பம் என பல் வேறு பகுதிகளாக இணைய தளம் மூலம் வழங்கி வருகிறது.
தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாசகர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது யுனிகோடு எழுத்துரு மூலம் இணையதளம் இயங்குகிறது.
வாசகர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க ஏதுவாக இணையதளம் வடிவமைக்கபட்டு உள்ளது.