என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
- பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ. 1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம் புது M2 மாடல் 486 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும். எனினும், காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. M டிரைவர் பேக்கேஜ் பெறும் போது இந்த காரின் வேகத்தை மணிக்கு 285 கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ M2 மாடல் தற்போது- போர்டிமௌ புளூ, ஃபயர் ரெட், சௌ பாலோ எல்லோ மற்றும் ஸ்கை-ஸ்கிராப்பர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளது. இதன் பக்கவாட்டில் சில்வர் அக்சென்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றம் மிக எளிமையாகவும், அதிநவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பியல் ஷாலோ புளூ, பியல் மிஸ்டி வைட், பியல் செரினிட்டி புளூ, மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் இக்னியஸ் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட கழற்றி மாற்றிக் கொள்ளும் பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள இரு பேட்டரிகளை முழு சார்ஜ் செய்தால் 102 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டிவா e: டாப் எண்ட் மாடலில் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் அலர்ட்களை வழங்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 6 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும். இது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இகோ, ஸ்டாண்ட்ர்டு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், விநியோகம் பிப்ரவரி மாதமும் துவங்க இருக்கிறது.
- நிசான் நிறுவனத்தின் பெரும் பகுதியை ரெனால்ட் கொண்டுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்ற பெயரால் அறியப்படுகிறது. 1999-ம் ஆண்டு பிரான்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது.
இந்த நிலையில், 14 மாதங்கள் வரை நிறுவனத்தை நடத்துவதற்கு நிதி உள்ள நிலையில், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் விடுத்த அழைப்புக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எந்த கார் நிறுவனமும் முன்வராது என்று கூறியுள்ளார்.
நிசானில் நீண்டகாலமாக பங்குகளை வைத்திருந்த ரெனால்ட் அதன் பங்குகளை விற்பனை செய்வதால் நிசானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
- இந்த கார் 550 கி.மீ. வரையிலான ரேஞ்ச் வழங்கும்.
மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய BE 6e எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மஹிந்திரா BE 6e காரின் விலை ரூ. 18.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் முன்பதிவுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், வினியோகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய BE 6e மாடலின் தோற்றம் அதன் கான்செப்ட் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஸ்டைலிங் கூர்மையாக காட்சியளிக்கிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இதில் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.
பின்புறம் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இந்த காரின் பம்ப்பர் டிஃப்யூசர் போன்ற எஃபெக்ட் வழங்குகிறது. இந்த காரில் 19 இன்ச் ஏரோ ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கிரவுன்ட் கிளியரன்ஸ் 207mm ஆகும்.
இந்த கார் 59 கிலோவாட் ஹவர் மற்றும் 79 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது. இதில் 79 கிலோவாட் ஹவர் யூனிட் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 288 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
புதிய மஹிந்திரா BE 6e மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 175 கிலோவாட் ஹவர் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் காரை 20-இல் இருந்து 80 சதவீதம் வரை 20 நிமிடங்களுக்குள் சார்ஜ் ஏற்ற முடியும்.
- இரு ஸ்கூட்டர்களும் அசத்தலான டிசைன் கொண்டுள்ளது.
- அதிகபட்சம் 146 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Z மற்றும் S1 Z பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய S1 Z மற்றும் S1 Z பிளஸ் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஸ்கூட்டரின் பேட்டரியை எஹ்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதற்காக 3-பின் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்படுகிறது. இரு ஸ்கூட்டர்களும் அசத்தலான டிசைன், மெல்லிய பேனல்களை கொண்டுள்ளது.
ஓலா அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் 1.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர்களில் இரண்டு பேட்டரிகள் இருப்பதால், அதிகபட்சம் 146 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.
இரண்டு ஸ்கூட்டர்களும் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.
- புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- புதிய எலெக்ட்ரிக் கார் லெவல் 2 ADAS சூட் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XEV 9e எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. XUV700 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கூப் மாலின் விலை இந்தியாவில் ரூ. 21.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய XEV 9e எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுடன் BE 6e மாடலையும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. XEV 9e மாடலில் முக்கோண வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ப்ரொஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் எல்.இ.டி. லைட் பார்கள் உள்ளன. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், இன்டகிரேட்டெட் ஸ்பாயிலர், கனெக்டெட் டெயில் லேம்ப் செட்டப், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா XEV 9e மாடலில் ஸ்டீரிங் வீல், பானரோமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 3 ஸ்கிரீன்கள் கொண்ட டேஷ்போர்டு, புதிய கியர் லீவர் மற்றும் சுழலும் வகையிலான டயல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆட்டோ பார்க் வசதி, வயர்லெஸ் மொபைல் ப்ரோஜெக்ஷன் வசதி, ஏழு ஏர்பேக், 65 வாட் டைப் சி சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய XEV 9e மாடல் 59 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 228 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த காரை 140 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 20 நிமிடங்களில் 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.
- உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
- இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் தனது லோகோவை மாற்றி இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் முந்தைய லோகோ நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
இந்த நிலையில் சீன சந்தையில் மட்டும் லோகோவை மாற்றுவது என ஆடி நிறுவனம் எடுத்துள்ள முடிவு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் வளையங்கள் அடங்கிய லோகோ பயன்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்திய ஆட்டோ நிகழ்வில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்திய இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பேக் மாடலில் இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
கான்செப்ட் வாகனத்தின் முகப்பில் ஆடி (AUDI) என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்று இருந்தது. முன்னதாக மற்றொரு உலகின் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான ஜாகுவார் தனது லோகோவை மாற்றிய நிலையில், தற்போது ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி இருக்கிறது.
சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஆடி தனது லோகோவை மாற்றியுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயித்துள்ளன.
- இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
- ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபல கார் மாடலாக சியரா விளங்குகிறது. இந்த நிலையில், சியரா பிராண்டிங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முற்றிலும் புதிய சியரா மாடல் எலெக்ட்ரிக் மற்றும் ஐ.சி. எஞ்சின் என இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
இதில் முதற்கட்டமாக சியரா எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும். இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கர்வ் எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐசி எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சியரா மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Acti.EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டாடா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் ஆகும். இதே பிளாட்பார்மில் முன்னதாக டாடா பன்ச் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் உருவாகி இருக்கும் சியரா மாடலில் இரட்டை மோட்டார் செட்டப் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய சியரா மாடலில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- இந்த பைக்கில் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை 2.35 லட்சம் ரூபாயாகவும் டபுள் டோன் வேரியண்ட் விலை 2.38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோன் கிளாசிக் 350 பைக்கானது பாபர் ஸ்டாலில் சிங்கிள் சீட் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 197 கிலோ எடை கொண்டது.
இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 170 மிமீ உயரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்தனர். இந்த மாத தொடக்கத்தில், ஓலா எலெக்ட்ரிக் அதன் இரண்டாவது காலாண்டில் ரூ.495 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.524 கோடியாக இருந்தது. ஆனால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
ஓலா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகார்கள் சரி செய்யப்பட்டதாகவும், அதன் விற்பனை மற்றும் இணைந்த சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும்.
- பின்புறம் எல்இடி காம்பினேஷன் லைட்கள் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் சீரிஸ் மாடல்களில் புதிய காரை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த முறை ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டுள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரில் ஏழு பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த கார் இதுவரை வெளியான ஹூண்டாய் மாடல்களை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் பாராமெட்ரிக் பிக்சல் லேம்ப்கள் மற்றும் சிறிய ப்ரோஜெக்ஷன் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் எல்இடி காம்பினேஷன் லைட்கள் வழங்கப்படுகின்றன.
வீல்களை பொருத்தவரை இந்த கார் 19 இன்ச், 20 இன்ச் மற்றும் 21 இன்ச் அளவுகளில் ஆப்ஷன் வழங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலில் 21 இன்ச் கேலிகிராஃபி டிசைன் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடல் மொத்தம் 16 நிறங்கள், ஆறு வித இன்டீரியர் டூ-டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த கார் 110.3 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகளுடன் வருகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என சான்று பெற்றுள்ளது. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலில் 160 கிலோவாட் மோட்டார் உள்ளது.
புதிய ஹூண்டாய் ஐயோனிக் 9 மாடல் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
- கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலிலும் ஹோண்டா பயன்படுத்தும்.
ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி விட்டது. மேலும், அதிகம் எதிர்பார்க்கப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் இருக்கைக்கு கீழ்புறத்தில் இரண்டு பேட்டரிகள் இடம்பெறுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனம் கழற்றக்கூடிய பேட்டரிகளை வழங்கி இருக்கிறது. அதே தொழில்நுட்பத்தை தற்போது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலிலும் ஹோண்டா பயன்படுத்தும் என தெரிகிறது.
இது தொடர்பாக ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் பேட்டரி மாற்றும் மையத்தில் பேட்டரிகள் எடுத்து ஸ்கூட்டரில் மாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பேட்டரி சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்