என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
- முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர்.
- டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர்.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இந்த நிலையில் 6-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் டிரா ஆனது.
- புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது.
- தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 38-35 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி பெற்றது.
- டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.
- ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிதி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் டி20 அணி விவரம்; ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நாங்யல் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல் ஹக் பரூக்கி, பரீத் அகமது, நவீன் உல் ஹக்.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி விவரம்; ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அப்துல் மாலிக், செடிகுல்லா அடில், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பைதின் நைப், ரஷித் கான், நாங்யல் கரோட்டி, ஏ.எம்.கசன்பர், முஜீப் உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், பரீத் அகமது மாலிக்.
- ரோகித் - ரித்திகா தம்பதி 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நவம்பர் 15 அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
இதனிடையே ரோகித் - ரித்திகா தம்பதி தங்களுக்கு பிறந்த ஆன் குழந்தைக்கு ஆஹான் என்று பெயரிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு குடும்ப பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அக்குடும்பத்தில் ரோகித் மற்றும் ரித்திகாவின் பெயர்கள் போ என்றும் பிட்ஸ் என்றும் பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தையின் பெயரை சம்மி அதாவது சமைரா என்றும் ஆண் குழந்தையின் பெயரை ஆஹான் என்றும் ரித்திகா பெயரிட்டுள்ளார்.
- ஜெய் ஷா, இன்று (டிசம்பர் 1) முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.
- 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, இன்று (டிசம்பர் 1) முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார்.
குறிப்பாக 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
A new chapter of global cricket begins today with Jay Shah starting his tenure as ICC Chair.Details: https://t.co/y8RKJEvXvl pic.twitter.com/Fse4qrRS7a
— ICC (@ICC) December 1, 2024
- ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
- அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் அண்மையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
இந்நிலையில், எம்.எஸ்.டோனியுடன் அஷ்வின் இருக்கும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "Come on Ash" izza Vibe!" என்று சி.எஸ்.கே. அணி பதிவிட்டுள்ளது.
Mahi ?️ : "Come on Ash" izza Vibe! ??#WhistlePodu #UngalAnbuden pic.twitter.com/6GWuNqx6rj
— Chennai Super Kings (@ChennaiIPL) December 1, 2024
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் விளையாடுகின்றன.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
எட்டு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஒட்டி இந்திய அணி இந்த முறையும் அந்நாட்டுக்கு சென்று விளையாட மறுத்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அட்டவணையை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இதற்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியுற்றால் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த வேண்டும்.
வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது என்றும் தங்களுக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும். மேலும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் நிபந்தனைகள் வைக்கப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- ஜோ ரூட், 2-வது இன்னிங்ஸில் 23 ரன்களை அடித்தார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஜோ ரூட், 2-வது இன்னிங்ஸில் 23 ரன்களை அடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 1625 ரன்களை அடித்துள்ளார். தற்போது ஜோ ரூட் 1630 ரன்களை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ஜோ ரூட் (1630) முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (1625) இரண்டாவது இடத்திலும், அலெஸ்டர் குக் / கிரேம் ஸ்மித் (1611) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
- இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது.
- மிட்செல் 84 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ரன்களை அதிவேகமாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது. ஹாரி புரூக் 171 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. நியூசிலாந்து அணி 2-வது74.1 ஓவர்களில் 254 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் 84 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.
இதனால் இங்கிலாந்துக்கு 104 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான கிராவ்லி ஒரு ரன்னி லும், டக்கெட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜேக்கப் பெத்தேல் - ஜோ ரூட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெற செய்தது. இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் பெத்தேல் 50 ரன்னுடனும், ஜோ ரூட் 23 ரன்னுடம் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
- 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.
4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவை (57.69 புள்ளி) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை தென் ஆப்பிரிக்கா (59.26 புள்ளி) பிடித்துள்ளது.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 70 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இதனால் இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக தினேஷ் சண்டிமால் 83 ரன்கள், தனஞ்செயா டி செல்வா 59 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது.
- அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில்அவுட் ஆனார்.
- 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை வில்லியம்சன் கடந்தார்.
கிறிஸ்ட்சர்ச்:
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், ஸ்டோக்ஸ் 80 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 151 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3-வது நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்துள்ளது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில் வீழ்ந்தார்.
முன்னதாக வில்லியம்சன் இந்த 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் நியூசிலாந்து தரப்பில் 9000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்