என் மலர்
இந்தியா
- அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
- இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
- மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து கோகர்ணா நோக்கி தனியார் பேருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தனியார் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
- பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவிடம் வளாகத்தில் பா.ஜ.க. சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தேசிய நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் தலைவர்களின் சிலைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-
பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். மேலும், இங்கு அமைக்கப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் அளித்தவர்கள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்,'' என்று கூறியுள்ளார்.
- உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை என ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அத்துடன், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.
இந்தப் புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையைப் பின்பற்றி அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
- ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
- இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.
மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.
இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.
இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
புதுடெல்லி:
கடந்த 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உத்தர பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கை உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை கையாளும் முறை இதுதானா?
நீதிக்காக குரல் எழுப்பும் துணிச்சல் அவருக்கு இருப்பதுதான் அவருடைய குற்றமா?
குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வெட்கக் கேடானது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் என்ன வகையான நீதி.
நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்.
மக்களாட்சியில் குரல் எழுப்புவது உரிமை, அதை ஒடுக்குவது குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.
- 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருடைய கோடங்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
2029 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
உங்கள் அரசியல் என்னவென்று நான் பார்க்கிறேன். நான் அரசியலில் இருக்கும் வரை, விஷம் போன்ற கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன். இது எனது சபதம். கோடங்கல் மண்ணின் மைந்தனாக இந்த மண்ணில் இருந்து இந்த சபதத்தை நான் ஏற்கிறேன்.
நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆருக்கு அதிகாரம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அது பயனற்ற ஆட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
- இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
- தைவான் தங்களுடைய பகுதிய என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
பென்டகன் அளித்த அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அருணாச்சலம் பிரதேசம் சீனாவின் முக்கிய நலன். அருணாச்சல பிரதேசம் நலனில் பேச்சுவார்த்தை அல்லது சமரசத்திற்கு சீனா தயாராக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் தலைமை தனது 'முக்கிய நலன்களின்' வரம்பை விரிவுபடுத்தி அதில் தைவான், தென் சீனக் கடலில் உள்ள இறையாண்மை கோரிக்கைகள் மற்றும் கடல்சார் பிரச்சினைகள், சென்காகு தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை நீணட காலமாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்களுடையது எனக் கூறி வருகிறது. மேலும், அருணாச்சல மாநில எல்லை அருகே குடியிறுப்புகளை கட்டி வருகிறது. கட்டமைப்புகளையும் விரிவுப்படுத்தி வருகிறது.
- பிறந்த நாள் விழா பார்ட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது சம்பவம் நடைபெற்றுள்ளது.
- மயக்க பொருள் கொடுத்து உயர் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மானேஜரை, சக நிறுவன சிஇஓ மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதே விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். பெண் மானேஜர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் அந்த பெண்ணை தங்கள் காரில் ஏறச் சொல்லியுள்ளனர். அவரும் தன் நிறுவத்தின் உயர் அதிகாரிகள்தானே, என நினைத்து காரில் ஏறியுள்ளார்.
கார் கொஞ்சம் தூரம் சென்ற பின், ஒரு கடை அருகே நின்றுள்ளது. ஒருவர் காரில் இருந்து இறங்கி சிகரெட் போன்ற ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை பயன்படுத்துமாறு பெண் மானேஜரிடம் கொடுத்துள்ளனர். அவரும் பயன்படுத்தியுள்ளனர். உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
காலையில் மயக்கம் தெளிந்த பின்னர்தான், தனக்கு நடந்த கொடூரத்தை உணர்ந்துள்ளார் பெண் மானேஜர். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
போலீசார் புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் மானேஜரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
- காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
- கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- இந்த முறை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை.
ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது.
கேல் ரத்னா விருது என்பது இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதாகும். இது அதிகாரப்பூர்வமாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு விருதான அர்ஜுனா விருது என்பது இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் 2-வது உயரிய விருதாகும்.
இந்த விருது விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் அர்ஜுனா சிலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா: ஹர்திக் சிங் (ஹாக்கி)
அர்ஜுனா விருதுகள்:
தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), பிரணதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜித்ரான்ஹோக்கி கண்டேல்வால் (பாரா-ஷூட்டிங்), ஏக்தா பியான் (பாரா தடகளம்), பத்மநாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (ரோயிங்), அகில் ஷியோரன் (துப்பாக்கிச் சுடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கிச் சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), டிமிண்டோன், அராட்டி கோபிசந்த் (பேட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (தடகளம்), பூஜா (கபடி).






