என் மலர்
பிரிட்டன்
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
- இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
லண்டன்:
இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.
இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
- மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் 4 பேர் மீது பொருளாதார தடை.
- இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை மந்திரியான வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேரும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்குள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 4 பேர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், "இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுமார் 30 வருட சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக, இலங்கை அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
- முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
- பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.
தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.
மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்- திரிஷா ஜாலி ஜோடி, சீனாவின் டான் நிங்-லியு ஷெங் ஷு ஜோடி மோதியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன ஜோடி 21-14, 21-10 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-13, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் கிம்முடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-19 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கின் அடுத்த இரு செட்களை 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.
- பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகம் திறக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில், பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் பங்கேற்றார்.
லண்டன்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையே, வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு மான்செஸ்டரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தைத் திறந்து வைத்தார். அப்போது, பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய தூதரக ஜெனரலாக விசாகா யதுவன்ஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் உள்பட பலர் பங்கேற்றனர்.
அங்குள்ள ஓல்டு டிராபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன்வாழ் இந்தியர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் உள்ள கவுன்டி அணியான லங்காஷைர் பெண்கள் கிரிக்கெட் அணியினரையும் அவர் சந்தித்தார்.
- இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார்.
- இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி உடன் ஆலோசனை நடத்துகிறார்.
லண்டன்:
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தொடங்கின.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி உள்பட பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களையும் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் இந்தியாவை தீவிரமாக உலகமயமாக்கி வருவதால், ரூபாயின் சர்வதேசமயமாக்கலை நாங்கள் தெளிவாக ஊக்குவிக்கிறோம். அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றனர், மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், ரூபாயின் பயன்பாடும் அதிகரிக்கும்.
பல சமயங்களில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை ஆதரித்துள்ளோம்.
இந்தியாவின் உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக ரூபாய் பரிவர்த்தனைகளின் நிலையான வெளிப்புறமயமாக்கலை இது பிரதிபலிக்கிறது.
டாலரின் பங்கு குறித்து நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. டாலரை குறைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என தெரிவித்தார்.
- 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
- இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.
5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார். இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
- ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார்.
வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
இந்த கடுமையான பேச்சுவார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அங்கு அவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அங்கிருந்தோர் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உங்கள் ஆதரவுக்கு நன்றி என அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
- 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
இதில் பல்வேறு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளை சேர்ந்த 20 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
7 முறை உலக சாம்பியனான ஹாமில்டனுக்கு இந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தாண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் மார்ச் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது.