search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
    • மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

    இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

    தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

    அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

    அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

    அமாவாசை யிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது.

    எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.

    அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

    பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.

    மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.
    • தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    "முரன்" என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

    முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

    அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.

    தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

    அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    • மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும். அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.
    • பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

    நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது.

    ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும். அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

    இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.

    கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.

    எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும். ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.

    இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.

    ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.

    ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு. ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.

    Ôஏகாதசி மரணம், துவாதசி தகனம்Õ என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.

    ஏகாதசி உபவாசமிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறை வனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.

    • ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.
    • அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.

    அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

    இதனை, "பச்சைப்பரத்தல்" என்பர்.

    கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர்.

    திருமணம் முடிக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

    ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.

    அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.

    • வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.
    • இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.

    இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

    விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.

    ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.

    பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக கேம் இது!

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

    இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.

    அந்த உட்பொருளின் வெளிவடி வாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!

    சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம். பூஜைகளைச் செய்வோம்.

    அந்த பரந்தாமன் நம் எண்ணங்கள் அனைத்தையும் நலமுடன் நிறைவேற்றுவான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    * மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும். சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள். இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை நடை பெற்ற நாள்தான் தைப்பூச நாள். இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.

    * ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.

    * திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர். அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம். இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.

    * பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.

    * தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம். இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர். ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். 1871&ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.

    * கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4&ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும். இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று. உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.

    * செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள். தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.

    • தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.
    • இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.

    அதிலும் மத்யார்ஜுனம் எனப் போற்றப்படுவதும், சைவத்தால் மேலோங்கித் திகழ்ந்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்படைந்து விளங்குவதுமான திருவிடைமருதூரில் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் பெருந்திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

    புராண, வரலாற்றுப் பெருமைகளுடன் இன்னும் பல சிறப்புகளையும் கொண்ட இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் சீருடனும், சிறப்புடனும் விளங்குகிறது. காவிரி தென்கரையில் அமைந்துள்ள 30&வது தலமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புராணத்தின்படி இத்தலத்தில் தவமிருந்து விபண்டக, முனிவருக்கு சிவபெருமான் காட்சி யளித்தார். அப்போது விபண்டக முனிவர் ஆண்டு தோறும் தைப்பூச நாளன்று காவிரிக்கரையில் உள்ள கல்யாண தீர்த் தத்தில் நீராடியவர்கள் நோய் நொடி, பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற்று வாழ வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். இறைவனும், 'அவ் வாறே ஆகுக' என்று வரம் அருளினார்.

    ஒருமுறை தேவ விரதன் என்ற கள்வன் திருவாபரணங்களைக் களவாட முயன்ற பாவத்தால், நோய் வாய்ப்பட்டு மாண்டான். மறுபிறவியில், அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து, பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணிய வானின் கால் பட்டு, முக்தியடைந்தான் என்றும், இப்புண்ணிய நாளில் நீராடிய அயோத்தி மன்னன் ஒருவனும், சித்ரகீர்த்தி என்ற பாண்டிய மன்னனும் புத்திரப்பேறு பெற்றனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

    மேலும், இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    • தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.
    • இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்ப கோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில்.

    தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.

    இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    மூலவராக அக்னீஸ்வர ரும், தாயாராக கற்பகாம் பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண் டவம் ஆடி நீங்கியருளியத் தலம் பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத் தலம் , அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

    அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம், கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம், மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம், வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம் என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.

    இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக் கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத் தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    பிரம்ம தேவருக்கு திரு மணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்ப காம்பாள் காட்சி அளிக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.
    • வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள்.

    ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். அதன் விளக்கம் அறிவோமா?

    திருக்கஞ்சனூர் தல மஹாத்மியம்

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

    அப்போது இறுக்கம் தாங்காமல் வாசுகியானது தன்னை அறியாமல் விஷத்தை உமிழ்ந்தது.

    பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களை இழுக்க சொல்லி, வால் பாகத்தை தாங்கள் பிடித்துக் கொண்டு கடையத் துவங்கினர்.

    நீண்ட முயற்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது .

    இதனை கண்டு மனம் மகிழ்ந்த தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தேவர்களுக்கு தந்தருளினார்.

    இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யர் தேவர்களை நோக்கி வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்.

    அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற நீங்கள் மனைவி, மக்கள், நாடு, நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்களாக என சாபமீட்டார்.

    சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    அதற்கு சுக்ராச்சார்யர், இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாகவும், காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசர முனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸ புர க்ஷேத்திரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவர சுக்ர சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று கூறினார்.

    தேவர்களும் அவ்வாறே (இன்றைய கஞ்சனூர்) கம்சபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தை மேற்கொண்டு வழிபட்டு வந்ததால் பரம கருணா மூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் ராசிகளான ரிஷப ராசியில் சூரியனும் துலா ராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாக பெருநாளில் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

    ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்கிர பகவான் இருக்க வேண்டிய இடத்தில் எம்பெருமான் அக்னீஸ்வரராக எழுந்தருள்கிறார் என்கிறது தல வரலாறு.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.
    • ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.

    1) மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு வருகிற ஏப்ரல் 12ந்தேதி (சனிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.

    2) தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

    3) ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

    4) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். சந்தனக்காப்பு, வெண்ணை காப்பு செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். விஷேச மலர் அலங்காரம் செய்யப்படும். முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க கவசம் மற்றும் வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது.

    5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    6) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், கட்டண விவரங்கள் டிஜிட்டல் போர்டு (எல்.இ.டி) மூலம் பக்தர்கள் பார்க்கும் அளவுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

    7) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    8) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    10) ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.

    11) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூ மாலைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    12) 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    13) தினமும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

    14) பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கட்டணம் செலுத்தி தங்க ரதத்தை புறப்பாடு செய்யலாம்.

    15) குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.

    • திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
    • ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.

    திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.

    ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.

    மலை உச்சியைப் பார்! என்று ரமணர் உட்பட, பல மகான்களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும்.

    எனவே, திருவண்ணாமலையை நோக்கியவாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும்.

    இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.

    ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தமமான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது.

    ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கைக் கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும்.

    நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும்.

    உங்கள் ஊர் ஆலயத்தில் பெரும்பாலும் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார் அல்லவா.

    தினந்தோறும் ஸ்ரீலிங்கோத்பவ சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.

    எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி உள்ளது என்பதை உணருங்கள்.

    • உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.
    • அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.

    பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.

    மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.

    திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.

    அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.

    விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது.

    இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.

    பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம்.

    விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.

    திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம்.

    அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.

    திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம்.

    குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.

    ×