என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமரிசித்துள்ளது.
    • பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்த டெம்போ என்ற பத்திரிகைக்கு கொடூரமான முறையில் அச்சுறுத்தல் விருட்க்கப்பட்டுள்ளது.

    ஒரு பன்றியின் தலையும், வெட்டபட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியும் டெம்போ பத்திரிகையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    1970 களில் இருந்து இந்தோனேசியாவின் சிறந்த வாராந்திர வெளியீடுகளில் ஒன்று டெம்போ. சமீபத்தில் அதிபர் பிரபோவோவின் கொள்கைகள் குறித்த விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) (மார்ச் 22), டெம்போவின் அலுவலகத்தில் துண்டாக்கப்பட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பன்றியின் தலையும் அங்கு அனுப்பப்பட்டது.

    இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது.



    இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று ஆய்வு அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் - இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சர்வதேச பத்திரிகையாளர் குழுவும் இந்த சம்பவத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    "பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்" என்று டெம்போவின் இதழின் தலைமை ஆசிரியர் செட்ரி யசாரா தெரிவித்துள்ளார். அரசின் சமீபத்திய பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் இந்தோனேசியாவில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. எனவே ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறாக பாய்ந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    • கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் குடகேன் நகரில் பிரதான சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே அங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு இடம் இருப்பதாகவும், இதனால் கடுமையான கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரிகளிடம் கைதிகள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்களில் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

    எனினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பியோட கைதிகள் முடிவு செய்தனர். இதற்கான சமயத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்தநிலையில் கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மிகுதியான காவலர்கள் பணியில் இல்லாததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிறையின் பிரதான கதவை உடைத்தனர்.

    பின்னர் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 20 கைதிகளை கைது செய்தனர். அதேசமயம் தப்பியோடிய மற்ற கைதிகள் தலைமறைவாகினர். எனவே அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • 3 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவு அமைந்துள்ளது. அங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.

    இது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.

    முன்னதாக கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-19 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த லீக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் செட்டை 21-13 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 24-22, 21-18 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
    • திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.

    இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை போக்க அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் பல திட்டங்களில் ஒன்று இலவச உணவு திட்டம். இத்திட்டமே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரபோவோவின் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது. விழா ஏதுவும் இன்றி சாதாரணமாக நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 190 சமையல் அறைகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.



    இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் போது 2029 ஆம் ஆண்டில் நாட்டின் 280 மில்லியன் மக்கள்தொகையில் 82.9 மில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள் 3 மில்லியனாக அதிகரிக்கும் என்றார். 

    ×