என் மலர்
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.
- தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
2017 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து மஹாநதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் திரைத்துறையின் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார். அதில் அவர் " நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். இந்த திரைத்துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். பல மோசமான மனிதர்களுடனும் வேலை செய்துள்ளேன்" என அவரது அனுபவத்தை பகிர்ந்தார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்து இருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஆர்கே,
- விஐபி ஹேர் கலர் ஷாம்பூக்கு இந்திய அரசாங்கம் 20 வருட அறிவுசார் காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே..
குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கூட இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்தது. அதிலும் ஹைலைட்டாக 'டை' அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை உலகிலேயே முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.
ஒரு தமிழனாக, இந்தியனாக இவர் கண்டுபிடித்த இந்த இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூக்கு இந்திய அரசாங்கம் 20 வருட அறிவுசார் காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல மனிதனின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றான குறட்டைக்கு தீர்வு கண்டுள்ளார் ஆர்கே. அது இந்திய அரசாங்கத்தால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அப்படி, தான் எடுத்துக்கொண்ட எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய போராட்டம் நடத்தி அதை சாதித்துக் காட்டுபவராக ஆர்கே இருக்கிறார்.
சினிமாவில் என்றால் சில மாதங்களுக்கு சில நூறு பேருக்கு தான் வேலை வாய்ப்பளிக்க முடியும்.. ஆனால் கடந்த 15 வருடங்களாக தனது நிறுவனம் மூலம் இந்தியாவெங்கிலும் சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் வேலை வாய்ப்பளித்து வருகிறார் ஆர்கே.
இப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்கராரரான ஆர்கேவுக்கு இவரது பன்முகத்திறமையை பாராட்டி உலக அளவில் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்து தங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன.
இங்கே இந்திய அரசும் தமிழக அரசும் எவ்வளவோ விருதுகளைக் கொடுத்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருதுகளை, ஆஸ்கார், ரோட்டர்டாம் விருதுகளைத் தான் பெரிதாக நினைக்கிறோம்.
காரணம் வெளிநாட்டுக்காரர்கள் நம் திறமையை அங்கீகரிப்பது என்பது எப்போதுமே நமக்கு பெரிய விஷயம் தான். அப்படி ஒரு பன்முகத் திறமையாளராக, ஒரு தொழில் வல்லுநராக, ஒரு சாதனையாளராக அடையாளம் கண்டு நடிகர் ஆர்.கேவுக்கு 18 நாடுகள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன.
நான்கு வருடங்களுக்கு முன்பு மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ விருது ஆர்.கேவுக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல ATJEH DARISSALUM மன்னர் கைகளாலும் டத்தோ ஸ்ரீ விருது பெற்றவர் தான் ஆர்கே.
இந்த நிலையில் தற்போது ATJEH DARISSALUM மன்னருக்கு அடுத்ததாக கருதப்படும் டான் ஸ்ரீ என்கிற உயரிய விருதையும் ATJEH DARISSALUM மன்னர் கையால் பெற்றுள்ளார் ஆர்.கே.
இது கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு வழங்கும் 'சர்' பட்டத்திற்கு நிகரானது. இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
ஆர்கேவை மேலும் சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடம் பழமை வாய்ந்த, தனக்கு இன்னொரு மன்னரிடம் இருந்து பரிசாகக் கிடைத்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார் ATJEH DARISSALUM மன்னர்.
அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்த்துள்ளார் ஆர்கே..
இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு கௌரவம் பெற்ற முதல் நபர் என்றால் அது நம் நடிகர் ஆர்கே மட்டும் தான் .
ATJEH DARISSALUM மன்னரிடம் இருந்து இப்படிப்பட்ட உயரிய விருது மற்றும் கௌரவம் கிடைத்தது குறித்து நடிகர் ஆர்.கே கூறும்போது,
"வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது வேறு.. அது மட்டுமே முக்கியமல்ல.. நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன் தரவேண்டும். நம் சாதனைகளுக்காக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் கையால் இப்படி விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதை ஒரு தமிழனுக்கான உயர்ந்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன்.
காரைக்குடியிலிருந்து வந்த ஒருவர் மன்னர் கையால், பழம்பெருமை வாய்ந்த இரண்டு வாள்களை எனக்கு பரிசாகத் தரும் அளவிற்கு ஏதோ சாதித்துள்ளேன் என்பது ஒரு தமிழனாக என்னை பெருமை கொள்ள வைக்கிறது.
இதுபோன்ற விருதுகளும் அங்கீகாரமும் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் ஆர்கே.
கருமாரி மூவிஸ் சார்பாக ஆர். கண்ணன் இயக்கத்தில், KT பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில், இமான் இசையில் ஆர் கே நடிக்கும் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. விலங்குகள் முக்கிய பங்கேற்கும் இப்படம் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
- 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளான God Bless U பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் நேரளவின் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 18 நிமிடங்களாக இருக்கிறது. திரைப்படத்தின் முன்பதிவு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப்.
- இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில்அடுத்ததாக பசில் மரண மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார்.டொவினோ தாமஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் கலவையாக டிரெய்லர் உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
- ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது.
படத்தின் பின்னணி காட்சிகளை காமிக் வடிவங்களில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8- வது அதியாயத்தை வெளியிட்டது அதில் நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்க் படத்தின் எப்படி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பதை விவரித்துள்ளது.
ஜெயராம் எப்பொழுதும் நடிக்கும் போது அங்கு இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பார். பல நடிகர்களின் குரலில் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் மலையாளம் பேசினாலும் படப்பிடிப்பின் காட்சியின் போது பக்கா தமிழில் பேசி அசத்துவார் என அந்த காமிக்கில் பதிவிட்டுள்ளனர்.
- இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
- கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ளது. சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து பல நூறு கோடி ரூபாயை ஒரு இடத்தில் இருந்து திருட திட்டமிட்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் வடிவேலு பல கெடப்புகளில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
- ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் ஷர்மிளா தாபா
- இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.
ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம் , வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஷர்மிளா தாபா. மேலும் இவர் சின்னத்திரையில் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.
நேபாளத்தை சேர்ந்த இவர் நடன் உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக கூறி வழக்கு பதிவு. முதலில் இவர் இந்தியா பாஸ்போர்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் அவரது அண்ணாநகர் முகவரியை கொடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் பாஸ்போர்ட் புதுபிக்கும் போது வியாசார்பாடியில் உள்ள முகவரியை கொடுத்ததால் இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த காவல் அதிகாரி நடிகை தாபா மீது 3 பிரிவுகளிலன் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
- நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
- படத்தின் செக்ண்ட் சிங்கிளான God Bless U பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளான God Bless U பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் நேரளவின் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 18 நிமிடங்களாக இருக்கிறது. தணிக்கை குழுவிடம் சென்று வந்ததற்கு பிறகு ஒரு சில நிமிடங்கள் குறையலாம். ஒரு பக்கா மாஸ் கமெர்ச்ஷியல் திரைப்படத்திற்கு தேவையான எல்லாமே இப்படத்தில் அமைந்துள்ளது.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'.
- திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு சமீபத்தில் புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டாலும். படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தின் இந்தி வெர்ஷனை ஓடிடியில் 8 வாரம் திரையரங்கில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியிடவுள்ளனர். திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார்.
- இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழு தற்பொழுது புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் நானி வாயில் சுருட்டுடன் மற்றும் கயில் துப்பாகியுடன் மாஸாக இருக்கிறார். போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 15 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி இணைந்துள்ளது
- சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- தக் லைஃ திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- வீடியோவில் கமல்ஹாசனின் சிறுவயது புகைப்படத்தில் இருந்து தற்போது வரை உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. அதில் இன்னும் திரைப்படம் வெளியாக 65 நாட்கள் மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் கமல்ஹாசனின் சிறுவயது புகைப்படத்தில் இருந்து தற்போது வரை உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.