என் மலர்
செய்திகள்
- 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
- 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு நிதி தராவிடினும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால் மாநில அரசின் நிதி செலவிடப்படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மேலும் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-
* மாணவர்கள் வருகை, ஊட்டச்சத்து, கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.
* நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
* உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் பாடங்களில் கூடுதலாக 15000 இடங்கள்.
* 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* திறன்மிகு வகுப்பறைகள் நவீன ஆய்வகங்களை உருவாக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில் மலைப்பகுதிகளில் உள்ள 14 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
- நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் கூறியதாவது:
* அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும்.
* நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* வரும் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் காங்கிரிட் வீடுகள் கட்டப்படும்.
* முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வரும் நிதியாண்டில் காங்கிரிட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி செய்யப்படும்.
* 25 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
- இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் கூறியதாவது:
* திருக்குறள் மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஐ.நா.வின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு பெற்ற நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும்.
* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
* தமிழ் புத்தக திருவிழா இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
அந்த வரிசையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் உயர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
- 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்திய திருநாட்டில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்.
* In equality is a choice bus we can choose different path என்பதன் அடிப்படையில் வெற்றி நடைபோடும் தமிழகம்.
* ஏழை, எளிய நகர்ப்புற குடியிருப்புக்கு தனிவாரியம், மகளிருக்கு வாக்குரிமை, சொத்துரிமை என தமிழகம் அனைத்திலும் சிறப்பானது.
* 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இருமொழி கொள்கையால் உலகம் எல்லாம் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர்.
* இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
* எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும்.
* அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* திருக்குறளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும்.
* தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
- மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
- தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது.
- பாதுகாப்பு கருதி பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.
சிங்கப்பூர்:
தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.
அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்று கூறினார்.
- கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் குடகேன் நகரில் பிரதான சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே அங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு இடம் இருப்பதாகவும், இதனால் கடுமையான கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரிகளிடம் கைதிகள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்களில் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
எனினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பியோட கைதிகள் முடிவு செய்தனர். இதற்கான சமயத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மிகுதியான காவலர்கள் பணியில் இல்லாததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிறையின் பிரதான கதவை உடைத்தனர்.
பின்னர் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 20 கைதிகளை கைது செய்தனர். அதேசமயம் தப்பியோடிய மற்ற கைதிகள் தலைமறைவாகினர். எனவே அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
- இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது.
மதுரை:
மத்திய அரசி்ன் மும்மொழி கொள்கையை கண்டித்து மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் உங்களுக்கு நிதியை கொடுப்போம் என மத்திய அரசு கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மாணவர்கள் இந்தியில்கூட தேர்வை எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு மொழிக்கொள்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. கொரோனா காலத்துக்கு பின்பு, இல்லம் தேடிக்கல்வி முயற்சியை வேறு எந்த மாநிலம் எடுக்காத நிலையில் நம் மாணவர்களுக்கு, குழந்தைகளின் முன்னேற்றத்தை கருதி முயற்சி எடுத்தோம்.
இருக்குற 2 மொழிக்கொள்கையை சிறப்பிக்க முயற்சிகள் எடுக்கும்போது, அதை விட்டுட்டு மூன்றுக்கு செல்வது சரியா?
தமிழ்நாட்டில் பல பத்தாயிரம் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள். கல்வி பெற்று வருகிறார்கள். இதில் கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி திணித்தால், எத்தனை ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நமக்கு தேவை. எத்தனை பத்தாயிரம் மணி நேரங்கள் இல்லை; லட்சம் மணி நேரங்கள் அவங்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டியதுவரும். இதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எத்தனை கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள். தேவைப்படும். இதற்கெல்லாம் யார் செலவு செய்வார்கள்?
கொள்கை என்று நீங்கள் எழுதி கொடுக்கிறீர்கள். செயல்படுத்த வேண்டியது நாங்கள். இன்றைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
இதில் அமைச்சர் பசங்க எங்க படிக்கிறாங்க... அமைச்சர் பேரங்க எங்க படிக்கிறாங்க.... என்கிறார்கள். அமைச்சர்கள் 34 பேரோட பசங்க எங்க படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித்திட்டம் என்பதுதான் முக்கியம். எந்த வாதத்தையும் தனிநபருக்காக திசை திருப்ப முயற்சிப்பது சரியல்ல. அவ்வாறு செய்தால் வாதத்தை திசை திருப்புகிறார்கள் என்று நாம் எண்ண வேண்டும். ஆனாலும் நான் ஒரு உண்மையை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் (அண்ணாமலை), எதோ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பசங்க எத்தனை மொழி படித்தார்கள்? என சொல்லட்டும் எனக்கேட்டுள்ளார்.
நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு 2 புதல்வர்கள். என் அப்பா பெயரை 2 பேருக்கும் பிரித்து வைத்துள்ளேன். ஒருவர் பழனி, இன்னொருவர் வேல்.
எல்.கே.ஜி. முதல் பள்ளிப்படிப்பை முடிக்கிற வரை இருமொழி கொள்கை படிதான் இருவரும் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கொள்ளட்டும்.
இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது. அதற்கு மேல் திருச்சியில் ஒரு அலுவலகத்தை வைத்து எங்கெங்கெல்லாம் எப்ப எல்லாம் முடியுமோ மத்திய அரசாங்க நிதியை வைத்து இந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் தடை செய்யவில்லை. தமிழகத்துக்கு இருமொழி கொள்கைதான் சரி.
இவ்வாறு அவர் பேசினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.
மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..
- இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சட்டசபையில் இன்று கூடும் முதல் நாள் கூட்டத்தில் காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2025-26-ம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.