என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது அதோமுகம் திரைப்படம்.
    • அதோமுகம் இயக்கிய சுனில் தேவ அவரது அடுத்த படமாக மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது அதோமுகம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் இப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டனர்.

    இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமானார்கள். பலரும் அதோமுகம் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அதோமுகம் இயக்கிய சுனில் தேவ அவரது அடுத்த படமாக மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அதோமுகம் நாயகன் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஷபானா மற்றும் தீபிகா வெங்கடாசலம் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை தமிழ் செல்வன், இசை சரண் ராகவன், படத்தொகுப்பு - தமிழ் அரசன் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ஸ்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • அடுத்ததாக பேசில் ஜோசப் `மரண மாஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

    பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இந்நிலையில்அடுத்ததாக பசில் மரண மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் பெயர் என பசில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். டொவினோ தாமஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் திரைப்படத்தின் ப்ரோமோ பாடலான ஃப்லிப் சாங் பாடலை வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    • மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் நெற்று வெளியானது.

    இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாவனா தனியாக ஒரு அறையில் இருக்கிறார். அமானுஷ்யமான ஒரு உணர்வு மற்றும் உருவம் தெரிகிறது.

    • நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான்.
    • எம்புரான்' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில்  உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

    ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் விஷ்வல் மற்றும் மேக்கிங் பற்றி மக்கள் பலரும் பாராட்டி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான 22 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்பொழுது உலகளவில் திரைப்படம் 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • அருண்விஜய் நடிப்பில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.
    • இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார்.

    தமிழில் நாடோடிகள் படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். பின்னர் நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் பாலா இயக்கி அருண்விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது புதிய படமொன்றில் சமுத்திரக்கனி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

    இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்க, விஜி வசனம் எழுதுகிறார். படத்துக்கு 'பைலா' என்று பெயர் வைத்துள்ளனர். சனுகா இசையமைக்க ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    • இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.
    • பிளாக் மெயில் படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வளம் வருகிறார்.

    இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.

    அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் Once More
    • ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா? புதிரா? பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    • மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
    • இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.

    எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.

    ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.

    இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

    இயக்குநர் ஹயாவோ மியாசாகி 

     

    இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர். 

    • அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்தி பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும்  அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை  நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. 

    மேலும் இப்படத்தில் ரிதீஷ் தேஷ்முக், வானி கபூர், ராஜத் கபூர், சௌரப் ஷுக்லா, சுப்ரியா பதக் , அமித் சியால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையாக அமைந்துள்ளது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பாகமும் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது.
    • க்ரிஷ் 3 திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்துள்ளது

    க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ரசித்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் பல சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு அதற்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களான க்ரிஷ் 2, க்ரிஷ் 3 வெளியாகி வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

    இந்நிலையில் க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிருஷ் 4 பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் க்ரிஷ் 4 பாகத்தை ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

     

    இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளது எனவும். படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஆதித்யா சோப்ரா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக செயல்படவுள்ளனர். இப்படம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    ×