என் மலர்


- சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
- எனக்கு தனுஷையும் பிடிக்கும்.
தமிழ் திரையுலகில் "ஓ மை கடவுளே" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
அதன்படி, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. மேலும், இவர் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனின் ரசிகரான அஷ்வத் தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரையே இயக்குகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, "நான் நடிகர் சிலம்பரன் ரசிகர் தான். ஆனால் எனக்கு நடிகர் தனுஷையும் பிடிக்கும். மேலும், நான் அவரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறேன். அது காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையை கொண்ட படம் ஆகும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மர்மர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு காரணமாக திரைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
- மர்மர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்றதாக தகவல்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது.
முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது, "தற்போது புதிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் வருகிறார்கள் எனில், தமிழ்நாட்டில் தமிழ் படங்களின் வெற்றி சதவீதம் 5 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கிறது."
"வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வரும் பட்சத்தில் அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. இதில் மாதம் ஒரு படம் தான் வெற்றி பெறுகிறது. ஒரு படம் கணக்கெடுக்கும் போது 4 முதல் 6 சதவீத படங்கள் தான் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக இருக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று பார்த்தால் வெறும் 4 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
- கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SaiPallavi #viralvideo pic.twitter.com/YuLJT9dLf8
— Diksha Sharma (@DikshaS17150327) March 12, 2025
- விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .
- இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
`நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.
இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
??️ TESAER OUT NOW ??️
— vijayantony (@vijayantony) March 12, 2025
?#ShakthiThirumagan - https://t.co/LXOPM2BUPM
?#Bhadrakaali - https://t.co/WkjjwmU3NM#VA25⛓️@ArunPrabu_ @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm pic.twitter.com/rF5sVXRPfP
- லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.
- இவரது அரங்கேற்றம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
அந்த வகையில் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார். சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல பாடகி ஷாலினி சிங் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
பாப் ஷாலினி என பிரபலமாக அழைக்கப்படும் ஷாலினி சிங் பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஷாலினி பாடியுள்ளார். தமிழில் இவர் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர் மற்றும் பலரின் இசையில் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை
- அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது
தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்தவரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சௌந்தர்யா.
ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், கமலின் காதலா காதலா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அங்கு அறியப்பட்ட முகமாக இருந்தவர் சவுந்தர்யா.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா. சினிமா கனவினால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்தார். முன்னணி நடிகையாகவும் உருவெடுத்தார். சௌந்தர்யாவுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கிடந்தனர்.

அவருக்கு 2003 இல் ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருடன் திருமணமும் நடந்தது. 2004 இல் விபத்து நடந்த அன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அரசியல் பிரசாரதிற்காக கரீம்நகரில் இருந்து விமானத்தில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா புறப்பட்டார்.
ஆனால் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனத்தில் இருவரும் உயிரிழநதனர். அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது. எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. திரையுலகில் இன்று வரை இது ஒரு துயர சம்பவமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலை என நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக சந்தேகம் கிளப்பியுள்ளார்.
ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.

விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை.
இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
- குட் பேட் அக்லி திரைப்பட்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

இதனிடையே தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு, குட் பேட் அக்லி வெளியீட்டை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்தனர்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.
இந்தப் படத்தின் முடிவில் இதன் அடுத்த பாகம் உருவாகலாம் என்பதை உணர்த்து்ம காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், இதுபற்றிய கேள்விகளுக்கு கற்பனை அடிப்படையில் தான் அப்படியான காட்சிகள் வைக்கப்பட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனாலும், எதிர்காலத்தில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தி கோட் படத்தின் அடுத்த பாகம் அதாவது தி கோட் vs ஓ.ஜி. (OG) படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "தி கோட் vs ஓ.ஜி. படம் குறித்த அப்டேட் 2026-ம் ஆண்டுக்கு பிறகு வெளியாகும்," என்று தெரிவித்தார்.
தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, கோமல் ஷர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
- சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார்.
- உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இப்படம் 4 கதைகளை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. 4 கதைகளும் அம்மா என்ற உறவின் மேன்மையை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ராவணன் பாடலை நாளை படக்குழு வெளியிடவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.
- இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுள்ளார்
சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ். மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 4 தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ள்து. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. டிரெய்லரில் வரும் சில காட்சிகள் நான் ஈ திரைப்படத்திற்கு ஒற்றுப்போகிறது.
இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ் காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார, பூஜா ஹெக்டே அவரது வசங்களை தமிழில் தானே டப்பிங் செய்துள்ளதாகவும். படத்தின் நடிக்கும் போதுக் கூட முழுப்பக்க வசனமாக இருந்தாலும் பூஜா ஹெக்டே மிகவும் கடின உழைப்பை போட்டு தமிழ் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பூஜா ஹெக்டே தான் நடித்த படங்களில் தமிழில் டப் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.