என் மலர்
செய்திகள்
- திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பா.ஜ.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை தமிழக அரசும் கோவில் நிர்வாகமும் நடைமுறைப்படுத்தாமல் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் தீபம் ஏற்ற வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தவறாக பேசியும், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பியதாக புகார் எழுந்தது. இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த கார்மேகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் என்பவர் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் மீது அசிங்கமாக திட்டுதல் (பிரிவு 79), அவதூறு பரப்புதல் 196(1), பொய்யான கருத்தை சொல்லி இரு தரப்புக்கு மோதலைத் தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.
- ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
ப ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார். அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார்.
ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் முடிவால் ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது.
- விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்டவைகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.
அதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை இண்டிகோ நிறுவனம் அளித்து வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சேவைகள் ஏ.டி.ஆர். விமானங்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 7.35, 10.35, மதியம் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 உள்ளிட்ட நேரங்களில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகளை மட்டும் நாளை (16-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் விமானங்களை கொண்டு இயக்க உள்ளது.
மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகள் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையாகிறது. இதனால் சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்குவதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-12-2025- ஒரு கிராம் ரூ.210
13-12-2025- ஒரு கிராம் ரூ.210
12-12-2025- ஒரு கிராம் ரூ.216
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
- 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்
இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மின்னு வட்டம் பூச்சி ' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், யுவனை தனக்குப் பிடித்த பாடகர் என்று கூறிய ஜஸ்டின், இந்தப் பாடலில் யுவனின் மந்திரம் இருக்கும் என்றார். யுவனுடன் சேர்ந்து, ' மின்னு வட்டம் பூச்சி ' பாடலை பத்மஜா பாடியுள்ளார், கார்த்திக் நேதா எழுதியுள்ளார். இந்தப் பாடல் நாளை வெளியாக உள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.
- விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 2 கார்டுதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்த நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் சரிபார்ப்பு வாயிலாக, 'பாயிண்ட ஆப் சேல்' என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மை தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதற்கான பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, "விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை" என்றனர்.
- நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்தாண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்தாண்டு சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரின் இந்தாண்டு சராசரி 15 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்றை போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய சூர்யகுமார் யாதவ், "நெட் பயிற்சியின் போது நான் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். நான் ரன்களை அடிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஃபார்ம் அவுட்டில் இல்லை. அவுட் ஆஃப் ரன்ஸ் தான். மீண்டும் ரன்கள் குவிப்பேன்" என்று தெரிவித்தார்.
- படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
- வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக பேசப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரது நடிப்பில் 1999-ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'படையப்பா' மீண்டும் கடந்த 12-ந்தேதி ரிலீசுக்கு வந்தது.
திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது.
படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக பேசப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 'கில்லி' படம் தான் இதுவரை 'ரீ-ரிலீஸ்' செய்யப்பட்டு அதிக வசூல் (ரூ.10 கோடி) குவித்த படம் என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்னும் ஓரிரு நாளில் முறியடிக்கலாம் என்றே சினிமா வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
- 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது
- இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டியில் வருண் சக்கரவர்த்தி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
32 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இந்த மைல்கல்லை அதிவேகமாக தொட்ட 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
- பலரும் மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.
இன்றைய நவீன காலத்திலும் வரதட்சணை வாங்கி தான் திருமணம் முடிப்பேன் என்று சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து திருமணமே நின்றுபோய் பேசு பொருளாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் திருமணக்கோலத்தில் ஊர்வலமாக வந்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராகிறார்.
அப்போது திடீரென மணமகன் எனக்கு 20 லட்சம் ரொக்க பணமும் ஒரு காரும் தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளின் தந்தை மணமகனின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் என் மகளை திருமணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை என்று... ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் எனக்கு பணம் தான் முக்கியம் என்று சொல்கிறார்.
இதனை பார்த்த மணப்பெண் எனக்கு இந்த திருமணம் வேண்டாம். பண ஆசை பிடித்த இவரிடம் என்னால் நிம்மதியாக வாழமுடியாது என்று கூறி தனது தந்தையை அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பலரும் அந்த மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.






