search icon
என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதட்சணை அதிகம் கேட்டு கொடுக்க முடியாததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக புதிதாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    அங்குள்ள முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மணமகன் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.

    இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகம் அடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    • கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
    • மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    அதே போல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

    அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

    குஜராத்தின் போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாக்களித்தார்.

    அகமதாபாத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி வரிசையில் நின்று வாக்களித்தார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வாக்களித்தார்.

    மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

    தெற்கு கோவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

    இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    அசாம் - 27.34 சதவீதம்

    பீகார் - 24.41 சதவீதம்

    சத்தீஸ்கர்- 29.90 சதவீதம்

    கோவா- 30.94 சதவீதம்

    குஜராத்- 24.35 சதவீதம்

    மத்திய பிரதேசம் - 30.21 சதவீதம்

    கர்நாடகா- 24.48 சதவீதம்

    மகாராஷ்டிரா- 18.18 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 26.12 சதவீதம்

    மேற்கு வங்கம்- 32.82 சதவீதம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • வரும் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரமதர் மோடி வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    அதற்கு முந்தைய நாள் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.

    வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.

    சம்பவத்தையடுத்து சிஓ சிட்டி மயங்க் திவேதியுடன் பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஓ சிட்டி திவேதி உறுதியளித்துள்ளார்.

    சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    • உ.பியில் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    ஜனவரி மாதம் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக அயோத்தி ராமர் கோவில் சென்றார்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தினார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், சுக்ரீவா கோட்டையில் இருந்து லதா சவுக் வரை பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்றார்.

    பிரதமர் மோடிக்கு பாஜகவினர், பொது மக்கள் உள்ளிட்டோர் கோஷம் எழுப்பியும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

    பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் இந்த தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 8 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 8 இடங்களிலும் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    3-வது கட்டத்தில் 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று 3 இடங்களில் பிரசாரதில் ஈடுபடுகிறார்.

    சமாஜ்வாடி ஆதிக்கம் நிறைந்த இட்டவா மாவட்டம் புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே அருகே காக்ராய் பக்கா தால் பகுதியில் இருந்து இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அதன்பிறகு பிற்பகலில் சீதாப்பூர் மாவட்டம் வார்கானில் உள்ள அவாத்சுகர் மில் அருகே உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தேர்தல் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று மாலை அயோத்தி செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் ராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

    தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அயோத்தியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு செல்கிறார். அங்குள்ள கவர்னர் மாளிகையில் இரவில் அவர் தங்குகிறார்.

    பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இந்த 2 தொகுதிகளிலும் 4-வது கட்டமாக மே 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களாகும்.

    • அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
    • கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

    பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

    1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.

    2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    3. சொந்த வாகனம் கிடையாது.

    4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.

    5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.

    8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.

    9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.

    10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.

    11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.

    12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களின் உயிர் அபாயகர சூழலில் உள்ளது.
    • நன்கொடை பெற்றது அனைவருக்கும் தெரியும்.

    இந்திய மக்களின் வாழ்க்கை அபாயகர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்பூரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், "அரசாங்கத்தின் முடிவு காரணமாக அரசியலமைப்பு மட்டுமின்றி மக்களின் உயிரும் அபாயகர சூழலில் உள்ளது."

    "கொரோனா காலக்கட்டத்தில் இந்த அரசாங்கம் தடுப்பூசியை எப்படி கையாண்டது என்பதும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நன்கொடை பெற்றதும் அனைவருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்."

    "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, நாடு முழுக்க மருத்துவமனைகளில் இ.சி.ஜி. போன்ற இதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எங்கு, எப்போது பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும், எடுத்துக் கொள்ளலாம். நாட்டு மக்களின் வாழ்க்கையை பா.ஜ.க. தலைவர்கள் அபாயத்தில் தள்ளிவிட்டனர்," என்று தெரிவித்தார். 

    • தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.
    • ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே வாய் சண்டை முற்றி ஒருவரையொருவர் தலைமுடியை போட்டு இழுத்து, அடித்து சண்டையிடுகின்றனர்.

    இதனை அந்த பள்ளியின் வேலை பார்க்கும் ஊழியர் பார்த்து இருவரையும் பிரித்து சண்டையை நிறுத்தினார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

    அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.

    இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    • உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார்.

    உத்தரபிரதேசம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×