search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
    • வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.

    அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

    • 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
    • குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ, இன்று மாலை வெளியானது. நாளை முழு பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.

    அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர்.
    • 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார்.

    மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

    கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 'வெட்டு' என்ற பெயரில் இம்மாதம் 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

     

    ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது!

    ராகின் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர்.

    இசை எஸ்.எஸ்.தமன், பாடல் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார்.

    • டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது

    மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பஸூகா திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது அதற்காக மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மமூட்டி தரப்பினர் பதிலளித்துள்ளனர் அதில் " இது முற்றிலும் தவறான செய்தி. அவர் நலமாக இருக்கிறார். ரமலான் மாதம் என்பதால் அவர் அதற்காக நோன்பு இருந்து வருகிறார். அதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இந்த ஓய்வு முடிந்த பிறகு அவர் மகேஷ் நாராயணன் படப்பிற்கு செல்வார்" என கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
    • விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயசாந்தி ஒரு நேர்மையான காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அவரது மகனாக கல்யாண் ராம் தன்  வழியிலேயே ஒரு நல்ல காவல் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கும் விஜயசாந்தி ஆனால் அதற்கு நேர் மாறாக மகனான கல்யாண் ராம் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். ஆனால் தன் தாயின் மீது அன்பாக இருக்கிறார். இந்த நேர் எதிர் சிந்தனையுடைய இருவரும் மோதும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை பிரதீப் இயக்கியுள்ளார். ஐபிஎஸ் கதாப்பாத்திரத்திற்கே பேர் போனவர் விஜய்சாந்தி மீண்டும் அதே ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

    திரைப்படத்தை அசோகா கிரியேஷன்ஸ் மற்றும் NTR Arts நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையை அஜனீஷ் லோக்னாத் மேற்கொள்ள ஒளிப்பதிவை ராம் பிரசாத் செய்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டீசர் காட்சிகள் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார்.
    • நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

    Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். ஹர்ஷ் ரோஷன் இதற்கு முன் நானியின் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை 20 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியாகி வெறும் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்தது படத்தின் பெரிய வெற்றியாகும்.

    இப்படம் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்தில் காதலனை போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கை பிரியதர்ஷி எடுத்து வாதாடுகிறார். இதை மையமாக வைத்து திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற படத்தின் விழாவில் நானி பேசியதாவது " படத்தின் வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கூறுகிறார்கள் நான் கோர்ட் திரைப்படத்தை வெற்றி பெற வைத்தேன் என்று ஆனால் உண்மையில் கோர்ட் திரைப்படம் தான் என்னை வெற்றியடைய வைத்துள்ளது. மேலும் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவரையும் விழாவில் பாராட்டினார்"

    திரைப்படம் வரும் நாட்களில் இன்னும் பெரிய வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன்.
    • ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன். தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ரவீனா டாண்டன் திருமணமாகி தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.

    அவருக்கு ராஷா ததானி என்ற மகள் இருக்கிறார். இவரும் திரை உலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ராஷா ததானியும் தமன்னாவும் மிக நெருங்கிய தோழிகள். அவரது வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமன்னா தவறாமல் பங்கேற்று வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு ராஷா ததானி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகையில் தமன்னா பங்கேற்று மகிழ்ச்சியாக ஹோலியை கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக தமன்னா, ரவீனா டாண்டன், இப்ராகிம் அலிகான், மனிஷ் மல்கோத்ரா, ஆமன் தேவ்கன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த தமன்னா ஆடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. ரூ.46 ஆயிரம் மதிப்பிலான கருப்பு நிற பாடிகான் உடையில் அவரது அழகான நடை, அங்கு குவிந்து இருந்த மொத்த கேமரா கண்களிலும் பளிச்சென மின்ன தொடங்கியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

    'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது. படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.
    • இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 4 தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ள்து. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. டிரெய்லரில் வரும் சில காட்சிகள் நான் ஈ திரைப்படத்திற்கு ஒற்றுப்போகிறது.

    இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற கிரேசினஸ் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கே.எஸ் ஹரிசங்கர் மற்றும் விஷ்ணு விஜய் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சுஹைல் கோயா எழுதியுள்ளார்.

    இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.
    • இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நெட்டிசனின் கோரிக்கை ஒன்றுக்கு படக்குழு பதிலளித்துள்ளது. அதில் இந்த வருடம் பாகுபலி திரைப்படத்தை இந்தாண்டு ரீரிலீஸ் செய்யனுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு ஜூன் மாதம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×