என் மலர்
- சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:
நாங்கள் நல்ல தொடக்கங்களைப் பெறவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றவுடன், விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும்.
நாங்கள் தவறான களங்கள் மூலம் 8-10 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக அஜிங்க்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஓவர்களைக் கையாண்டார். நான் பின்னர் வந்தால் நிலைமையை சீராக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். அதே நேரத்தில் திரிபாதி முன்கூட்டியே அடிக முடியும்.
இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்படியிருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் ஆரம்பத்தில் பேட்டிங் செய்யத் தொடங்குகிறேன் என தெரிவித்தார்.
- டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.
நுகுஅலோபா:
தென்பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை டோங்கா தீவு திரும்பப் பெற்றுள்ளது.
- ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், கெய்க்வாட் என 4 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 182 ரன்களைக் குவித்தது.
- அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எடுத்தது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
சி.எஸ்.கே. சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 63 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
- பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.
சென்னை:
பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.
மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். .
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
- மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்: இடிபாடுகளைத் தோண்ட, தோண்ட உடல்கள் தொடர்ந்து மீட்பு பலி எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
மியான்மரில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு உருக்குலைந்துள்ளது.
தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.
அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் உருக்குலைந்து இடி பாடுகள் குவியலாக கிடக்கிறது.

அதனை அகற்றி ஏராள மானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்த நிலையில் மீட்கப் படுகிறார்கள். இதுவரை சுமார் 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தோண்ட, தோண்ட உடல் கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புபணி களில் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உதவி செய்து வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளதால் மியான்மரின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது தடைபட்டுள்ளது.

இதற்கிடையே மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இது நிவாரணப் பணிகளை மேலும் பாதிக்கும் என்று உதவி குழுக்கள் கவலை தெரி வித்துள்ளன.
மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நிலஅதிர்வுகள் உண்டானது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் தெருக்களிலோ அல்லது திறந்த வெளிகளிலோ இரவுகளை கழிக்கின்றனர். பலர் வீடுகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் அங்கு உள்நாட்டு போரும் நடந்து வருகிறது. ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை தற்போது நிலநடுக்கம் மேலும் இன்னலுக்கு தள்ளி உள்ளது.
இந்த நிலையில் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மியான்மரின் நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்புப்படை, 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தது.
நிலநடுக்க மீட்புப்பணிகளை எளிதாக்கும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தற்காலிக மீட்பு மற்றும் மருத்துவ முகாம்களை நிறுவுவதை உறுதி செய்ய ஐ.நா. மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு பல நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக இந்தியா, நிவாரண பொருட்கள், மீட்பு குழுவை அனுப்பியது. 60 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 5 மீட்புப்படை விமானங்கள் சென்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மியான்மரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், தாய்லாந்தையும் தாக்கியது. தலைநகர் பாங்காங்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர் களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இன்னும் 90 பேர் மாயமாகி உள்ளனர்.
- தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.
- ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.
ரம்ஜான் பண்டிகை வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.
இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.
இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ப்ரோமோவை படக்குழு வெளியிடவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.