search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நிரம்பிய அன்போடு சிவராத்திரி வழிபாடு செய்யுங்கள்....
    X

    நிரம்பிய அன்போடு சிவராத்திரி வழிபாடு செய்யுங்கள்....

    • தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
    • சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும்.

    பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

    மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

    முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.

    மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.

    தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.

    அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    Next Story
    ×