search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கணித மேதை ராமானுஜன்!
    X

    கணித மேதை ராமானுஜன்!

    • உலகின் கணித மும்மூர்த்திகளில் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர்.
    • நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்தவர் அந்த அறிவாளித் தமிழன்.

    நம்பர் தியரி (Number theory), காம்ப்ளக்ஸ் நம்பர் (Complex number), அனலிசிஸ் (Analysis), இன்ஃபினிட் சீரியஸ் (infinite serious) இதுபோல இன்னும் ஏராளமாக நாம் இன்றும் கற்கும் அதிசயக் கணிதங்கள் எல்லாம் கணித மாமேதை ராமானுஜம் கொடுத்தது.

    கும்பகோணத்தில் வறுமைவயப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். 10 வயதில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கே கணிதம் சொல்லித்தந்தவர்.

    அப்போது அவருக்கு வயது 24 ஆகியிருந்தவேளை, கணிதம் தொடர்பான சில கட்டுரைகளை அவர் லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயதுக் கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அதுவே உண்மை எனக் கண்டபின் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

    "இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன்!".

    தூக்கிச் சென்றார்கள், தலைக்குமேல் வைத்துக் கூத்தாடிக் கொண்டாடினார்கள்.

    படிக்க லாயக்கில்லாதவன், பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாத பித்தன் என்றெல்லாம் கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓடஓட விரட்டப்பட்டு, புறந்தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கெளரவம் "Fellow of the royal Society".

    இதனைப் பெற்ற முதல் இந்தியர் இவரே!

    அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான். ஆனால், உலகின் கணித மும்மூர்த்திகளில் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர்.

    (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ).

    ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார்.

    பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.

    அதில் 3542 தேற்றங்கள் அவர் நிறுவினார்.

    அவற்றில் 2000 உலகிற்கு அவர் புதிதாய்ச் சொன்னவை.

    இன்னும் பல தேற்றங்களுக்குக் கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

    அவற்றிற்கான விடைகளை எவரே சொல்வர் என இன்றளவும் கணித உலகம் காத்திருக்கின்றது.

    நோயுடம் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதத்திற்கு முன்னால் உலகிற்குக் கொடுத்தது புகழ்பெற்ற பொக்கிசம் "மாக் தீட்டா பங்க்சன்ஸ்".

    32 வயதில் அவர் இறந்த பின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின.

    முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகராகச் சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் கூறும் உண்மை.

    ஐன்ஸ்டீனும் இறுதிக்காலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார் என்கிறார்கள்.

    அப்படித்தான் அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள்.

    இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை, கோள்களின் ஆராய்ச்சிக்கான கணக்கீடு முதல் நவீன ஏ.டி.எம். மெஷின்களின் செயல்பாடுகள்வரை அவரது கோட்பாடுகளே துல்லியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்தவர் அந்த அறிவாளித் தமிழன்.

    - சோழ. நாகராஜன்

    Next Story
    ×