search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    புவியை காக்கும் கிரீன்லாந்து!
    X

    புவியை காக்கும் கிரீன்லாந்து!

    • ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை.
    • கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது.

    உலகின் மிகப்பெரிய தீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது கிரீன்லாந்து. பூமியின் வடதுருவத்துக்கு மிக அருகே, 59 டிகிரி முதல் 83 டிகிரி அட்சரேகை வரை பரந்து விரிந்துள்ளது கிரீன்லாந்து. இதன் நிலப்பரப்பு இந்தியாவின் முக்கால் பகுதி அளவுக்கு இருக்கும். மக்கள் தொகை 56,000 தான். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட பெரிய நிலப்பரப்பில் 56,000 பேர் வசிப்பதை கற்பனை செய்ய முடிந்தால் அது தான் கிரீன்லாந்து.

    ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை. இந்த பனிப்படலம் சுமார் 17,10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது! சராசரியாக இந்த பனிப்பாறை 1.6 கிலோமீட்டர் தடிமன் இருந்தாலும், சில இடங்களில் 3 கிலோமீட்டர் வரை தடிமன் இருக்கும்.

    இந்த பனிப்படலம் முழுக்க நல்ல குடிநீரால் ஆனதுதான். ஆனால் இது மட்டும் உருகினால், உலகமே அழிந்துவிடும் என்கிறார்கள். அந்த அளவு தன்ணீர் இதில் உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக உலக கடல் மட்டம் 25 அடி வரை உயரும் அளவு நீர் கிரீன்லாந்து பனிப்பாறையில் தேங்கியுள்ளதாம்.

    உலக நாடுகளின் கடற்கரையோர நகரங்கள், மாநிலங்கள் எதுவுமே அதன்பின் இருக்காதாம். தவிர கிரீன்லாந்தின் பனிப்படலம் மீது சூரிய ஒளி படும்போது, பனிப்படலத்தின் வெள்ளை மேற்பரப்பு ஒரு கண்ணாடி போல் செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலித்து விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது. இதனால், பூமியின் தட்பவெப்பம் கட்டுபடுத்தபடுகிறதாம். இல்லையெனில் பூமி இன்னும் சூடாக இருந்திருக்குமாம்.

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×