search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பூமத்திய ரேகை!
    X

    பூமத்திய ரேகை!

    • இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.
    • சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.

    பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.

    இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.

    பூமத்திய ரேகைக் கோட்டுப் பகுதியில் உலகில் மொத்தம் 14 நாடுகளும், பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.

    இங்கு காலநிலை மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் கொண்டு இருக்கிறது.

    பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டராகவும், துருவப்பகுதியில் 12,714 கிலோ மீட்டராகவும் ஆராய்ச்சியாளர்களால் அளவிடப்பட்டுள்ளது.

    பூமியின் சுழற்சி வேகம் நிலநடுக் கோட்டில் மணிக்கு 1670 கிலோ மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் துருவப் பகுதிகளில் அதனுடைய சுழற்சி வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் கிலோ மீட்டராக உள்ளது.

    பூமத்திய ரேகைப் பகுதியில் காலநிலை குறைந்தளவு வித்தியாசத்துடன் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இங்கு சூரியனின் கதிர்கள் நேராக விழுவதால் மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் நிகழ்கிறது.

    இதனால் இப்பகுதியில் உலகின் மழைக்காடுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் மழைக்காடுகள், காங்கோ மழைக்காடுகள், தென்கிழக்காசிய மழைக்காடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.

    உலகின் மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் பகல் பொழுது 12 மணி நேரமாகவும், இரவுப் பொழுது 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கிறது.

    மேலும் இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம் நிகழ்வுகள் ஒருசில நிமிடங்களே நிகழ்கின்றன. காரணம் ஆண்டின் பெரும்பகுதி சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.

    -அருண் நாகலிங்கம்

    Next Story
    ×