search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அட்சய திருதியில் என்ன செய்யணும்?
    X

    அட்சய திருதியில் என்ன செய்யணும்?

    • பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்.
    • அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல.

    அட்சய திருதியை என்பது சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் அமைப்பு.

    அமாவாசை முடிந்து 3வது திதியில் செய்த ஒன்று பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும்.!

    ஏன் என்றால் திதி தான் செல்வநிலையை குறிப்பது...

    இந்த திதியில் என்ன கொடுத்தாலும் அது உங்கள் கடைசி பரம்பரை வரை தொடர்ந்து வரும்..!

    கொடுத்தால் மட்டுமே பெருகும்...!

    அட்சய பாத்திரம் தர்மனுக்கும் மணிமேகலைக்கும் தான் கொடுக்கப்பட்டது

    காரணம், சாப்பாடு ஒன்றுக்காகவே!

    பசி என்று யார் வந்தாலும் பசித்த வயிறுக்கு அறுசுவை உணவை பரிமாற தானே தவிர

    தங்கம் வேணும் னு கேட்டு வந்தவர்களுக்கு கொடுக்க அல்ல,,

    தங்கம் வேணும் னு நினைத்துக்கொண்டு கையை உள்ளே விட்டால் தங்கம் வராது...!

    உணவுக்காக மட்டுமே தான் அது உருவாக்கப்பட்டது.

    பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்..அதை வைத்து தான் வனவாசத்தை முடித்தனர்..!

    எவ்வளவு கடுமையான மழையோ வெயிலோ பயிர்கள் விளையாத போதோ தன் நாட்டு மக்கள் பசியில் தூங்கிட கூடாது என்பதற்காக மணிமேகலை தவம் இருந்து பெற்றது..

    அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல..

    அள்ள அள்ள குறையாத அறுசுவை உணவை தரும் சக்தி கொண்டது.!

    பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வயிறு நிறைய அறுசுவை உணவை மணிமேகலை கொடுத்தார்..!

    அட்சய திருதியை திதி அன்று உணவு பொருட்களை மற்றவர்களுக்கு வாங்கி கொடுங்கள்...!

    அரிசி உப்பு பருப்பு நெய் காய்கறிகள் என எது உங்களால் வாங்கி தர முடியுமோ அதை வாங்கி கொடுங்கள்

    அன்று கொடுப்பதால் கொடுத்துகொண்டே இருக்கும் நிலை வரும்..!

    திருதியை திதி அன்று என்ன கொடுத்தாலும் அது பெருகும்..!

    மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகவே உங்களுக்கு கொடுக்கப்படும்..!

    ஒவ்வொரு தமிழ் மாத வளர்பிறை திருதியை அன்று என்ன கொடுத்தாலும் பெருகும்..அதை தான் மூன்றாம் பிறை என்று சொல்லி வழிபடுகிறார்கள்..!

    பார்க்கவும் சொல்கின்றீர்கள்..!

    3-ம் பிறையில் கொடுத்தால் பெருகும்...!

    வேண்டும் என்றால் முயற்சி செய்து பாருங்கள் அதன் சக்தி புரியும்..!

    -மணிகண்டன்

    Next Story
    ×