என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
மாரியம்மன் கோவில் திருவிழாவில் வன்முறை: 5 கடைகளுக்கு தீ வைப்பு
- மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
- கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.
இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.
கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.