என் மலர்
- யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
- 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
- இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும்.
- நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியம் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவர் அங்குள்ள வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். பின்னர் நடைபெற்ற ஆய்வில் அது ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயம் என்பது தெரிய வந்தது.
1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இதுவே இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும். இதனை தற்போது வால்டர்ஸ் விற்க முடிவு செய்தார். அதன்படி ஸ்டோர்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஏலத்தின்போது அந்த நாணயம் சுமார் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இதில் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார். பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.

20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.
- தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
2017 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து மஹாநதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் திரைத்துறையின் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார். அதில் அவர் " நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். இந்த திரைத்துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். பல மோசமான மனிதர்களுடனும் வேலை செய்துள்ளேன்" என அவரது அனுபவத்தை பகிர்ந்தார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்து இருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.
- கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.
- இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
- திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
- மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா எனக்கூறி கண்டித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.
- நிக்கோலஸ் பூரன் 44 ரன்னும், படோனி 41 ரன்களும் சேர்த்தனர்.
- அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். மார்கிராம் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இருந்தாலும் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார்.
இதனால் லக்னோ 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. வாய்ப்பு கிடைக்கும்போது பூரன் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த மில்லர் 19 பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் படோனி உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாட லக்னோ அணி 150 ரன்னைக் கடந்தது. அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் லக்னோ 20 ரன்கள் விளாசியது.
யான்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-ஆவது பந்தில் படோனி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
4-ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். இவர் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் ஒரு வைடு உடன் 3 ரன்கள் அடிக்க இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சன், சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார்.
- அதன்பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
ராமேஸ்வரம்:
ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ளன.
- விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் 36 வயதான இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருடன் இந்த சீசன் கிரிக்கெட் முடிவடைகிறது. அதன்பின் 2025-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் தொடங்க இருக்கிறது. இந்திய முதல் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
அதன்பின் 2027ஆம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறது.
இதனால் 36 வயதான விராட் கோலியை மேலும் இரண்டு வருடத்திற்கு பிசிசிஐ அணியில் வைத்திருக்குமா? அல்லது விராட் கோலி ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு பிசிசிஐ விராட் கோலிக்கு அதிக நெருக்கடி கொடுக்காது எனத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி நீடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் ஒரு நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது "தற்போது இருக்கும் நிலையில், உங்களின் அடுத்த பெரிய இலக்கு என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விராட் கோலி "அடுத்த பெரிய இலக்கா... எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, 2027ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்வதாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறமாட்டார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை. அதேவேளையில் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.