என் மலர்tooltip icon
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

    குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரசல், ரோவ்மான் பொவேல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

    • கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.
    • ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.

    கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் கடந்த மாதம் ஒரு பேஸ்புக் பதிவில் தான் எதிர்கொண்ட நிறம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து பதிவிட்டிருந்தார். தனது தோல் நிறம் குறித்து விமர்சிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் சாரதா முரளீதரன் ஓய்வு பெற உள்ள நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தோல் நிறம் குறித்த விமர்சனம் பற்றி பேசிய அவர், கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.

    அத்தகைய கருத்தை தெரிவித்தது ஒரு உயர் பதவியில் உள்ள நபரா என்று அவரிடம் கேட்டபோது, ஆம் என ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபர் ஒரு அரசியல்வாதியா அல்லது உயர் பதவியில் உள்ள அதிகாரியா என்பதை வெளிப்படுத்தத் தயங்கினார்.

    "அதற்குப் பிறகும் (சர்ச்சை) நாங்கள் இருவரும் மிகவும் நட்பான முறையில் பேசினோம், ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை" என்று சாரதா மேலும் தெரிவித்தார்.

    தோல் நிறம் குறித்த பாகுபாடு குறித்துத் தான் பேசியபோது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் தன்னை அழைத்து தனக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதே அவமானத்தை அனுபவித்ததாகத் தெரிவித்ததாகவும் சாரதா கூறினார்.

    சாரதா முரளீதரன் ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதால், கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக ஏ. ஜெயதிலக் நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • விருது பெற்ற அஜித்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.
    • ஹீராவுடன் அஜித்குமார் தொடரும், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று அஜித் குமாருக்கு இந்திய கவுரவ விருதான பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவர் வழங்கினார். விருது பெற்ற அஜித்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

    மறுபக்கம் முன்னாள் நடிகையான ஹீரா அஜித்தை பற்றி பல விஷயங்களை பற்றி பேசி அவரது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவு மிகவும் வைரலானது. இதைப்பற்றி நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    ஹீரா 90 களில் முன்னணி நடிகையாவார்.பல முன்னணி இயக்குனர்கள் படத்திலும், மணி ரத்னம், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    ஹீராவுடன் அஜித்குமார் தொடரும், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பொழுது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு ஒன்றாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின் சில மன கசப்பு காரணங்களால் பிரிந்தனர்.

    தற்பொழுது ஹீரா அவரது பதிவில் கூறியதாவது "அஜித் குமார் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார், என் மீது பகிரங்கமாக பழி சுமத்தி சினிமாவை விட்டு போகும் படி செய்து விட்டார்" என ஹீரா சொல்லி இருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    நடிகை ஹீரா இந்த பதிவை கடந்த ஜனவரி மாதம் எழுதி இருக்கிறார். அதில் "நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தது எல்லோருக்குமே தெரியும். கடைசியில் அந்த நடிகர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி எங்களுக்கு பொதுவானவரை வைத்து இந்த விஷயத்தை சொன்னார்.

    நான் ரொம்பவும் கெஞ்சி, கதறி அழுது இது உண்மையா என கேட்டேன். அதற்கு நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன், அப்போதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள், நான் விருப்பப்பட்ட மாதிரி எந்த பெண்ணுடனும் வாழ்வேன்" என சொன்னதாக ஹீரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

     

    மேலும் நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாய் அந்த நடிகர் தவறான தகவலை பரப்பி தன்னுடைய பெயரை மக்கள் முன்னிலையில் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

    மேலும் தனக்கு ஆபரேஷன் நடந்தது என அவர் சொல்வதெல்லாம் மக்களிடையே தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

     

     

    அவருடைய கஷ்ட காலங்களில் நான் இரவு பகல் பாராது அவருடன் துணையாக இருந்தேன். ஆனால் கடைசியில் என்னை நிற்கதியாக விட்டுவிட்டார் என ஹீரா சொல்லி இருக்கிறார்.

     

    இதில் அவர் அஜித்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சினிமாவில் காதலித்தது அஜித் தான் என்பதால் எல்லோரும் அவர் அஜித்தை பற்றி தான் பேசுகிறார் என உறுதி செய்து இருக்கிறார்கள்.

     

    இதனை ரசிகர்கள் பார்த்து சில் பேர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவை டேக் செய்து வருகின்றனர். ஆனால் இப்பதிவு எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. நடைகை ஹீரோ பதிவிட்ட இணையத்தளம் தற்பொழுது இல்லை. அதனால் மிகவும் குழப்பமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

    பலர் இதை அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்றனர் என பலவித கோணங்களை எழுப்பி வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என அஜித் சொன்னால் மட்டுமே தெரியும்.

    • 2017ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
    • சிறுமி வசித்து வந்து குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யபட்டு, நீதிமன்றம் தூக்கத்தண்டனை வழங்கியது.

    2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.

    இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கியது. தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

    • "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
    • ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.

    ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.

    மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    "பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.   

    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

    அந்த பயங்ரகவாதிகளுக்கு வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

    எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.

    பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், முப்படைத் தளபதிகள், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.  

    • தேசத்தின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.
    • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.

    இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பான புகார் மனுக்களை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது.

    விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை.

    தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனிநபர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால் அப்போது இந்த புகாரை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையில் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர்.

    ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று கோரிக்கையை நிராகரித்தனர்.

    மேலும் யார் யார் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றம் அமைத்த பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவிடம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தனிநபர் உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

    • மே1 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோடை விடுமுறையாகும்.
    • அவசரகால வழக்குகளை விசாரிக்க அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 1ஆம் தேதி முதல் முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோடை விடுமுறை ஆகும். இதனால் அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

    நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமா ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிபபர்கள்.

    இதேபோல் மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி தேசிய விடுமுறையாகும்.
    • இதனையொட்டி சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

    மே 1ஆம் தேதி (வியாழக்கிழமை) உழைப்பாளர் தினம் ஆகும். உழைப்பாளர் தினம் தேசிய விடுமுறை தினமாகும். தேசிய விடுமுறையை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி!
    • தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜக-விற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி!

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் 'பச்சைப் பொய்' பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் புள்ளி விவரங்களுடன் தோலுரித்தார்.

    பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி! அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி! என அடிமை அதிமுக-வின் அவல ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுக-வை வசைபாட கிளம்பியிருக்கிறார்.

    கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்னபோதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி!

    தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப்போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி! தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி!

    தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜக-விற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் 'Getout' சொல்லப்போவது உறுதி! இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.

    திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்யும் இந்த கோமாளிக்கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.

    'அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களின் ரத்தம் குடித்த ஆட்சி, பழனிசாமியின் ஆட்சி.

    "அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா...'' என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிசாமி ஆட்சிக்கு சாட்சி!

    நீட் உள்பட பல்வேறு மாநில உரிமைகளை சுயநலத்துக்காக டெல்லியிடம் அடகு வைத்த அரசுக்கு பழனிசாமியே சாட்சி!

    தலைவி வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கொடநாடே சாட்சி!

    அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி!

    இப்படி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்ட காலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.

    இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    ×