என் மலர்tooltip icon
    • மக்களவையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
    • மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன என்றார் அமித்ஷா.

    புதுடெல்லி:

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே, மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றை விருப்பப்படி நடத்த முடியாது என்பது தெரியாமல் இருக்கலாம்.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் அவருக்கு (ராகுல் காந்திக்கு) 42 சதவீத நேரம் வழங்கப்பட்டது. அப்போது யார் பேசுவது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு தீவிர விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் வியட்நாமில் இருந்தார், அவர் திரும்பி வந்ததும், தனது விருப்பப்படி பேச வலியுறுத்தத் தொடங்கினார்.

    பாராளுமன்றம் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியைப் போல அல்ல, ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். நான் சொல்வதற்கு வருந்துகிறேன், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
    • இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.

    இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.

    • இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
    • தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நைபிடாவ்:

    மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின.

    நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர் நிலநடுக்கத்தால் மியான்மர் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    • சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது:

    முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

    இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே, ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.

    குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்து வீசிய விதம் நம்ப முடியாதது.

    இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ரசிகர்கள் அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது.

    நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் அதை துரத்துவது எளிதல்ல.

    நான் இருக்கும்வரை ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தெளிவான குறிக்கோளாக இருந்தது என தெரிவித்தார்.

    • இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது.
    • இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது. இன்று உலகம் இந்தியாவை உற்றுநோக்கி பார்த்து வருகின்றன.

    கடந்த 70 ஆண்டுகளில் உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7-8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி?

    சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    உலகம் இந்தியாவின் முயற்சிகள், புதுமைகளை மதிக்கிறது. இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது. இந்தியா உலக நாடுகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம்தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது.

    பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத் துறையானது இதுவரை ரூ.22,000 கோடி பணத்தைக் கைப்பற்றி உள்ளது. இந்தப் பணமானது திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.

    சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும் எடுத்தனர்.

    சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கி ஆடி அவ்ருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.

    • விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
    • இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.
    • பிளாக் மெயில் படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வளம் வருகிறார்.

    இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.

    அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    ×