search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-7 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி மாலை 4.50 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரம் காலை 8.56 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகியம்மன், காரைக்கால் ஸ்ரீ கொப்புடையம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-வெற்றி

    கடகம்-லாபம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-முயற்சி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- கவனம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-தனம்

    மீனம்-பயணம்

    • பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே!
    • பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய்.

    திருப்பாவை

    பாடல்:

    கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

    பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்

    பெண்ணே!

    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

    ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

    நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி

    கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

    தேச முடையோய்! திறவேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எங்கள் குழுவிற்குத் தலைவியானவளே! கீசுகீசு என்று ஆனைச்சாத்தான் பறவை ள், தங்களுக்குள் பேசும் ஒலியை நீ கேட்க வில்லையா? பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே! காசு மாலையும், வளையல்களும் கலகலக்க கைகளை மாற்றி மாற்றி, மத்தினால் தயிர் கடையும் ஒலி உன் காதில் விழவில்லையா? கேசி என்ற அரக்கனைக் கொன்று 'கேசவன்' என்று பெயர் பெற்றவனை, அந்த நாராயணனை நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும், கேளாதது போல் படுத்திருக்கிறாயே! அழகிய மகளே! கதவைத் திறவாய்.

    திருவெம்பாவை

    பாடல்:

    அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்

    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

    சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய் திறப்பாய்

    தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்

    என்னானைஎன் அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்

    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

    வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

    விளக்கம்:

    பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய். முன்பெல்லாம், தேவர்கள் மனதாலும் நினைப்பதற்கு அரியவனும், பெரும் சிறப்பை உடையவனுமாகிய நம் சிவபெருமானுக்கே உரிய இசைக்கருவிகளின் ஓசையைக் கேட்ட மாத்திரத்திலேயே 'சிவனே' என்று உச்சரிப்பாய். 'தென்னவனே' என்று சொல்லும் முன்பாகவே அனலில் இட்ட மெழுகு போல உருகுவாய் ! இன்று எங்கள் தலைவன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனைப் பாடுகின்றோம். நீ இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே? கல் நெஞ்சம் படைத்தவர்களைப் போல சும்மா படுத்திருக்கிறாய்! உன் தூக்கத்தின் பெருமைதான் என்ன? நீயே கூறுவாயாக!

    • இன்று திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-6 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி பிற்பகல் 3.10 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மகம் காலை 6.53 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபல சுவாமி, திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-கடமை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-இரக்கம்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- சாதனை

    மகரம்-நலம்

    கும்பம்-சிந்தனை

    மீனம்-பாராட்டு

    ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

    திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் "தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன்.

    நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்" என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள்.

    ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

    • இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது.
    • ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார்.

    இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது.

    பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம்.

    பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.

    ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார்.

    அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

    • இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

    சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார்.

    மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம்.

    சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

    சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது.

    அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள்.

    சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்.

    இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

    • கோவிலின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.

    கோவிலின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.

    அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர்.

    எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர்.

    சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

    இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆரோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

    • அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
    • இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர்.

    அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.

    இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

    வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம்.

    திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்திற்குள் திகழ்கின்றன.

    இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

    மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன.

    இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

    உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்டதிக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    • 1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.
    • அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.

    அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள்களில் 1008 கலாசாபிஷேகம் செய்வார்கள்.

    காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும்போது 1008 கலசாபிஷேகத்தை நடத்துவார்கள்.

    1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.

    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாரை குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.

    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.

    திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் உள்ளனர்.

    ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம்.

    கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம்.

    சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் அண்ணாமலையாரும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.

    ஏனெனில் அண்ணாமலையார் இன்றும் அங்கு மிகுந்த அருளாற்றலுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி முக்தி பாதைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

    அவர் மீது நம்பிக்கை வைத்து சென்றால் நிச்சயம் நல்லதே நடக்கும்.

    நம்பிக்கை இல்லாமல் தவறாக நடந்து கொண்டால் தக்க தண்டனை கிடைக்கும்.

    • உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
    • அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

    தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.

    புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.

    இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.

    உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

    அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

    அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.

    திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

    பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.

    நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.

    மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

    மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

    எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.

    தயிர் அபிஷேகத்துக்கு உதவினால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.

    இளநீர் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு அமையும்.

    அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் அண்ணாமலையாருக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.

    • சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.
    • இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார்.

    சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.

    இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    தாரா அபிஷேகம் செய்யப்படுதால் திருவண்ணாமலை ஆலயத்தின் தினசரி வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

    வழக்கமான நேரங்களில் உரிய வழிபாட்டை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள்.

    ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது அண்ணாமலையார் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.

    தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும்.

    சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது.

    தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.

    தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.

    • இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
    • அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும்.

    தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும்.

    இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.

    அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும்.

    அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.

    சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.

    அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.

    அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது.

    இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார்.

    ×