என் மலர்
- கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன.
- மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளன.
இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தகவலின்படி நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளன.
மியான்மரில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.
- ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
- அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.
உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-
* தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
* அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.
* காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
* மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...
* ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-
* இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...
* சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?
* ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?
* தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.
* சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார்.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.
அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.
முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதற்குப் பதிலடியாக இன்று பெய்ரூட் புறநகர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும் நேரில் பார்த்த பத்திரிகை நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா டிரோன்களை மறைத்து வைத்திருந்த இடத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் "இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அமைதி இல்லாதவரை, பெய்ரூட்டிற்கும் அமைதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வடக்குப்பதியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா தெரிவித்து, லெபனானை தாக்குவதற்கு ஒரு சாக்குப்போக்கை தேடுகிறது என இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளது.
லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாதம் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் காலக்கெடு பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வடக்கு இஸ்ரேலில் இருந்து லெபனான் பகுதி வரை ஐந்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம் பிப்ரவரி 2-வது வாரத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாத நிலையில் காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது.
- மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
- அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது,
மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
"அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
- இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
- யஸ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், குடியரசுத் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே யஷ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஏற்கனேவே உள்ளக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவது அல்லது இந்த விஷயத்தை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
- சினிமாவில் இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.
அப்போது அவர்," சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.
- சிஎஸ்கே அணியில் பதிரனா இடம் பெற்றுள்ளார்.
- ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்:-
விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஜடேஜா, எம்எஸ் டோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரனா, கலீல் அகமது.
- கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
- நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.
இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.
காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.
நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.