என் மலர்
- ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
- அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் இம்பேக்ட் பிளேயராக இடம்பெறவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளாக இம்பெக்ட் பிளேயராக விளையாடி வந்த ரோகித் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்த முடிந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த முடிவை மும்பை அணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
- மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னக் குழுவும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
மத்திய அரசின் தொல்லியல்துறை (ASI) கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதன்படி டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் எட்டியுள்ளது.
2019-20 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.
2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
2023-24 நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
- 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இம்பெக்ட் பிளேயராக கூட அவர் இடம்பெறவில்லை. இது ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
- புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
- உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-
புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.
- கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார். ஆனால் இது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
ஓப்பனிங் விளையாடும் த்ரிபாதி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்.
என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறினார்.
- ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
- அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.
அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.
மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
- இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக்கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது.
- இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
- படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது . அதன்படி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான Loading Bazooka வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
- கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், கூலி படம் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.