என் மலர்tooltip icon
    • கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
    • சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக சந்தேகம்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திருச்சி தில்லை நகரில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. சென்னையில் அரசு பங்களாவில் அவர் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.

    அமைச்சர் கே.என்.நேருவுக்கு அருண் நேரு என்ற மகன் உள்ளார். பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் அருண்நேரு ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.


    அமைச்சர் கே.என்.நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.

    இவர் டி.வி.எச். (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் என்ற மின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    அந்த சோதனையின் போது கே.என்.நேரு சகோதரர்களின் நிறுவன வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து இது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரி களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் ஆவ ணங்களுடன் கொடுத்து இருந்தனர்.

    அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்களை பெற முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை, திருச்சி, கோவையில் உள்ள அமைச் சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது சகோத ரர்கள் மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை யில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 7 இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது. அடையாறு, தேனாம்பேட்டை, சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் கே.என்.நேரு வின் சகோதரர் ரவிச்சந்திர னுக்கு சொந்தமான இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது.

    ரவிச்சந்திரன் டி.வி.எச். என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகி றார். ராஜா அண்ணாமலை புரத்தில் டி.வி.எச். எனர்ஜி ரிேசார்சஸ் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு வில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

    காற்றாலை மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர் பா அலுவலகங்க ளாக அவை உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகளவில் இன்று சோதனை நடத்தி னார்கள்.

    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு எம்.பி.க்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் ஜி.எஸ்.என்.ஆர். ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. அங்கும் அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அதுபோல அடையார் காந்தி நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள வைத்திய நாதன் அடுக்குமாடி குடியி ருப்பில் ஒரு வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்ற விவ ரங்கள் இன்று பிற்பகலில் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருக்கு சொந்தமான, திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் கோவையில் இருந்து வந்துள்ள அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவரது சகோத ரர் மறைந்த கே.என்.ராம ஜெயத்துக்கு சொந்தமான திருச்சி தில்லை நகர் 10வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், மதுரையில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 2 இடங்களிலும் அமலாக்கத்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு வீட்டு முன்பு கட்சியினர் திரண்டனர். இதனால் தில்லைநகர் 5-வது கிராஸ் மற்றும் 10-வது கிராஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது.

    இந்த குடியிருப்புக்கு 3 கார்களில் இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை யினர் வந்தனர். அவர்கள் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது. சோத னையை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை யினர் சென்னையில் இருந்து வந்த தாக தெரிவித்து உள்ளனர்.

    டி.வி.எச். கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதனை கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் கவனித்து வருகிறார். இந்தநிலையில் தான் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

    • மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அந்த பகுதியை சேர்ந்த நாகராஜன் என்ற வாலிபர் மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மேல் பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனை சற்றும் எதிர்பாராத மூதாட்டி நாகராஜின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். அப்போது போதை ஆசாமி நாகராஜ் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டிக்கு முகம், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலும் மூதாட்டிக்கு உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து போதை ஆசாமி நாகராஜன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலையில் மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தாயை மீட்டு அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மூதாட்டிக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜாம்பஜார் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

    போதை வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:-

    * இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழி செய்யும் பொருட்டு தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

    * மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டம்.

    * மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 15,300 மீனவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.20.57 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * வலை பின்னுதல், படகு பழுது பார்த்தல், வண்ணமீன் தொட்டி தயாரிப்பு போன்ற பயிற்சிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும்.

    * 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.

    * காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.

    * இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார். 

    • பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து ராகுல் காந்தி பேசினார்.
    • கேள்விகளைக் கேளுங்கள், உங்கள் குரலை உயர்த்துங்கள்

    பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் ஆட்சி நடந்து வருகிறது. எதிர்கட்சியாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது.

    இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். 

    பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

    டெல்லியில் இருந்து வருகை தந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டபின், பாட்னாவில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.

    பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

    நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    மேலும் அரசியலமைப்பு மாநாடு குறித்து பதிவிட்டுள்ள அவர், சம்ப்ராண் சத்தியாக்கிரக இயக்கமாக இருந்தாலும் சரி, சமூக நீதிப் புரட்சியாக இருந்தாலும் சரி, பீகார் நிலம் எப்போதும் அநீதிக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று அந்த வரலாறு மீண்டும் ஒலிக்கிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, பாரபட்சம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக, பொருளாதார, சமூக சமத்துவம் மற்றும்நீதிக்காக நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்!. இன்று பாட்னாவில் சம்விதன் சம்மான் சம்மேளனத்திற்கு என்னுடன் சேருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாள படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது
    • எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் 'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

    இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.

    இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன.

    அண்மையில் எம்புரான் திரைப்படத்தை திரையரங்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டு ரசித்தார்.

    இந்நிலையில், மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "எம்புரான் படத்தில் வரும் ஒரு சிறு காட்சிகளை வைத்து பாஜக, சங் பரிவார் அமைப்புகள் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் ஆனால் எம்புரான் கம்யூனிசம் படம் கிடையாது" என்று தெரிவித்தார்.

    • இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது.
    • மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது.

    * தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

    * இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை.

    * 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே.

    * மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது.

    * மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம் என்றார். 

    • மர்மகும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
    • இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு திருமணம் ஆகி ஆஜிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.

    இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இர்பான் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை இர்பான், வழக்கம்போல் தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

    அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மகும்பல் அவரை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மர்ம கும்பல் இர்பானை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

    தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது வயிற்றில் குத்தினர். வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டபடி எழுந்து ஓடினார்.

    அப்போது மர்ம கும்பல் விடாது துரத்தி சென்று, ஓட, ஓட விரட்டி சென்று இடுப்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இர்பான் துடிதுடித்து இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் மர்ம கும்பல், இர்பான் இடுப்பில் குத்திய கத்தியை விட்டு, விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இர்பான் வேலை செய்யும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில்  தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,200-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    • இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×