search icon
என் மலர்tooltip icon

    போலந்து

    • ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் போலந்து அமைந்துள்ளது.
    • மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய மையமாக திகழ்கிறது.

    இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வது உண்டு. இதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

    ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.

    நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.

    • கடந்த நான்கு நாட்களில் உக்ரைனை தலைநகரை நோக்கி ரஷியா ஏவுகணை தாக்குதல்.
    • ரஷியா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு.

    உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதி பங்களிப்பை வழங்காத நாடுகளை ரஷியா ஆக்கிரமித்தால் உதவ மாட்டேன் என்றார் டிரம்ப்
    • ரஷிய அச்சுறுத்தலை ஐரோப்பிய நாடுகள் குறைத்து மதிப்பிட கூடாது என்றார் டஸ்க்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    போர் 2-வது ஆண்டை நெருங்கும் நிலையில் உக்ரைனுக்கு உதவியளித்து வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உரையாற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிதி பங்களிப்பை முறையாக வழங்காத நேட்டோ (NATO) நாடுகளை ரஷியா தாக்கினாலோ அல்லது ஆக்கிரமித்தாலோ அமெரிக்கா உதவ முன் வராது என குறிப்பிட்டார்.


    டிரம்பின் இந்த கருத்து பல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியாவை குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

    ஐரோப்பிய கண்டத்தில் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் சோவியத் குடியரசு ஆகிய இரு பெரும் நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடு, போலந்து. இதன் தலைநகரம் வார்சா (Warsaw).

    இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் பல தசாப்தங்கள் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது போலந்து.

    இப்பின்னணியில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரன் (Emmanuel Macron) மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் (Olaf Scholz) ஆகியோரை சந்தித்தார்.

    இச்சந்திப்பு குறித்து அவர் தெரிவித்ததாவது:

    ரஷியாவை விட ராணுவ ரீதியாக பலம் குறைந்து இருப்பது பாதுகாப்பானது அல்ல.

    ராணுவ தளவாட மற்றும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தற்போது மிக அவசியம்.

    ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் மிக பெரும் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடுவதும் ஆபத்து.

    ஐரோப்பிய நாடுகள், அடுத்து வரும் மாதங்களில் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

    இவ்வாறு டஸ்க் கூறினார்.

    டிரம்பின் தற்போதைய கருத்து, அமெரிக்க துருப்புகளுக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என நேட்டோ தலைமை செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பரிசோதனை முடிந்ததும் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார்.
    • பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

    போலந்து நாட்டில் உலக சாதனைக்காக 'ஐஸ்' கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக பங்கேற்றார். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது 'ஐஸ்' கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது.

    அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார். அவரை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் வெளியே வந்தார். இந்த சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:-

    இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை. இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.

    • ஆஷ்விட்ஸ் முகாம்களில் ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தார்
    • யூத எதிர்ப்பு சிந்தனைகள் எக்ஸ் தளத்தில் குறைவு என்றார் மஸ்க்

    இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் அதிபர் அடால்ஃப் ஹிட்லர், அண்டையில் உள்ள போலந்து நாட்டை ஆக்கிரமித்தார்.

    யூத மதத்தினரை வெறுத்த ஹிட்லர், போலந்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்களை அடைத்து வைத்து, அவர்களை தனது படையினரை கொண்டு கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தார்.

    1945ல், "ஆஷ்விட்ஸ்" (Auschwitz camp) என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து, ஹிட்லர் உயிரிழந்து, அமெரிக்க-இங்கிலாந்து படைகள் வெற்றி பெற்ற காலத்திலிருந்து, நாஜி படையினரின் கொடுமைகளை உலகிற்கு உணர்த்தும் விதமாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் போலந்து நாட்டில் இவற்றை காண வருவது வழக்கம்.

    இந்நிலையில் ,உலகின் நம்பர் 1 கோடீசுவரரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், போலந்து சென்றார். 


    தனது மகனுடன் அங்கு சென்றிருந்த மஸ்க், ஆஷ்விட்ஸ் முகாம்களை பார்வையிட்டு, கொல்லப்பட்ட யூதர்களுக்கான நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    தெற்கு போலந்தில் கிராகோ (Krakow) பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார் மஸ்க்.


    அப்போது பேசும் போது மஸ்க், "மனிதர்கள், சக மனிதர்களுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய முடியும் என்பது மிகவும் சோகமாக இருக்கிறது. துயரத்தில் என் மனம் நெகிழ்ந்து விட்டது. நேரிடையாக நீங்கள் இந்த இடத்திற்கு வந்து பார்த்தால் உங்கள் இதயம் இன்னும் கனத்து விடும். யூதர்களுக்கு எதிரான கருத்துகள் எக்ஸ் இணைய தளத்தில் குறைவு" என தெரிவித்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்து ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் நடத்தும் கருத்தரங்கில் மஸ்க் கலந்து கொள்கிறார்.

    • வாலிபர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்குள்ள கடை முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் தானும் சிலை போலவே நின்று நடித்துள்ளார்.
    • வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை திருடுவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    போலந்து தலைநகர் வார்சா பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடை முன்பு சிலை போல் நின்ற ஒரு வாலிபரின் நடவடிக்கைகள் அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் கடையின் ஜன்னலுக்கு பின்னால் ஒரு பையை வைத்துக் கொண்டு நின்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்குள்ள கடை முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் தானும் சிலை போலவே நின்று நடித்துள்ளார்.

    எனினும் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை திருடுவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மற்றொரு வணிக வளாகத்தில் பொருட்களை திருடியதும் தெரியவந்தது.

    • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
    • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

    போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

    இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

    இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    • எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும்.
    • சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    வார்சா:

    எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    உட்கார்ந்த வாழ்க்கை முறை பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

    இந்நிலையில், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம் என போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

    போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

    அதிக தூரம் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

    ஒருவர் இவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை.இருப்பினும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

    இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள் நடப்பது. அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமானது.

    இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம்.

    ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது.

    60 வயதிற்கு மேற்பட்டோர் எனில் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×