என் மலர்tooltip icon
    • 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
    • இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இம்பெக்ட் பிளேயராக கூட அவர் இடம்பெறவில்லை. இது ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    • புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
    • உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-

    புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.

    ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.

    • கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார்.

    ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார். ஆனால் இது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.

    ஓப்பனிங் விளையாடும் த்ரிபாதி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்.

    என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறினார்.

    • ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
    • அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.

    கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

    வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

    வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

    அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.

    அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.

    அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.

    மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   

    • கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
    • இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.

    இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக்கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது.

    • இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
    • படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார்.

    அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது . அதன்படி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான Loading Bazooka வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    • கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 

    கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், கூலி படம் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Sensex tumbles 930.67 points to close at 75,364.69; Nifty declines 345.65 points to 22,904.45
    • நிஃப்டி நேற்று 166.65 புள்ளிகளும், இன்று 345.65 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவு.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்று (புதன்கிழமை) சென்செக்ஸ் 322.08 புள்ளிகளும், நிஃப்டி 166.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,295.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 130 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 76,258.12

    புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 930.67 புள்ளிகள் சரிவை சந்தித்து 75,364.69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 23,250.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 60 புள்ளிகளில் சரிந்து 23,190.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 23,214.70 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 22,857.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 345.65 புள்ளிகள் சரிந்து 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
    • திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளான God Bless U பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

     

    திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். தற்பொழுது மேலும் ஒரு சுவாரசிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லரை இன்று இரவு 9.01 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    படத்தின் கதைக்களம் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. டிரெய்லர் காட்சிகளில் படத்தின் கதைக்களம் ஓரளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    • மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
    • மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

    கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    *கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு,

    *ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

    *மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.

    * மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

    *1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.

    *1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

    *அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.

    *அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால். இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

    *இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.

    * குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

    *கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

    *எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஐ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

    *கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

    *நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.

    *இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.

    *நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

    *போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த. இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    *இலங்கை செல்லும் நம் ஒன்றிய பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    ×