search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விளக்குகள் பலவிதம்
    X

    விளக்குகள் பலவிதம்

    • வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
    • தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை.

    விளக்குகள் பலவிதம் உண்டு. பித்தளையில் தயாரிக்கப்படும் விளக்கு தான் மிகவும் சிறந்தது. பழைய காலத்தில் பித்தளையில் செய்த விளக்கைத்தான் அனைவரும் பயன்படுத்தினார்கள்.

    இக்காலத்தில் ஸ்டீல் விளக்கு, வெள்ளி விளக்கு முதலியவை உண்டு. மாலை வேளையில் விளக்கேற்றுவதற்கும், விசேஷ நாட்களில் விளக்கேற்றுவதற்கும், தொடக்க விழாக்களுக்கும், திருமணம் போன்ற சடங்குகளுக்கும் பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்துகிறார்கள்.

    விளக்குகளில் குத்துவிளக்கு (சாதாரண விளக்கு, ஐந்து திரி விளக்கு, ஏழு திரி விளக்கு), தொங்கும் விளக்கு, கோல் விளக்கு, சங்கிலிவட்ட விளக்கு என்று பலவகைகள் உண்டு.

    வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஐந்து திரி விளக்கேற்றுவார்கள். கோல் விளக்கு, கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வேளைகளில் ஏற்றி வைப்பார்கள்.

    தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை. இவை பொதுவாக கோவில்களில் மட்டுமே ஏற்றப்படும். அஷ்டமங்கள காரியங்களுக்கு சங்கிலிவட்ட விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    Next Story
    ×