search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் இல்லை: உச்சநீதிமன்றம்
    X

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் இல்லை: உச்சநீதிமன்றம்

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால், தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக இரு தரப்பினரும் மே 7-ந்தேதி (இன்று) தயாராக வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை.

    கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

    Next Story
    ×