search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்பு  MODI சர்கார் - பின்பு BJP சர்கார் - நேற்றிலிருந்து NDA சர்கார் - ப.சிதம்பரம் கிண்டல்
    X

    முன்பு ' MODI' சர்கார் - பின்பு 'BJP' சர்கார் - நேற்றிலிருந்து 'NDA' சர்கார் - ப.சிதம்பரம் கிண்டல்

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×