இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்டவர் மன்மோகன் சிங்
- பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
- இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பஞ்சாபின் கா என்ற இடத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1932, செப்டம்பர் 26-ம் தேதி பிறந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் மன்மோகன் சிங் குடும்பத்துடன் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி உள்ளார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.
மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.
இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார்.
1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தார்.
1990 -91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்.
1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதி மந்திரியாக மன்மோகன் சிங் இருந்தார். இக்காலத்தில் தான் புதிய பொருளாதார கொள்கை முதலில் அமல்படுத்தப்பட்டது.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பிறகு 2004 முதல் 2014 வரை பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்தார்.
இதன்மூலம் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடிக்கு பிறகு நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அப்போது முதல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.