இந்தியா
மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு- மு.க.ஸ்டாலின்
- கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர்.
- தமிழர்களின் பல்லாண்டு கனவான செம்மொழி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மன்மோகன் சிங் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே பேரிழப்பு. கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர். தமிழர்களின் பல்லாண்டு கனவான செம்மொழி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்தார். தமிழகத்தில் மெட்ரோ ரெயில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டம் வருவதற்கு மன்மோகன் சிங் தான் காரணம். நூறு நாள் வேலை என்ற புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்தவர் என்றார்.