null
ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு குறையும் வரி?.. மத்திய அரசின் திட்டம் என்ன?
- 12 முதல் 15 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்டுகிறது.
- நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருப்பு அதிகரித்து நுகர்வு வருமானத்தை அதிகாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் நுகர்வு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களின் வருமான வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி பட்ஜட்டில் இந்த வரிக்குறைப்பை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரித்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி புதிய வருமான வரி விலக்கு அறிமுகமானது.
அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மூன்று முதல் 7 லட்சம் ரூபாய்க்கு 5% வரி , 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு 10% வரி, 10 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 15% வரி, 12 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு 20% வரி, 15 லட்சத்திற்கு மேல் 30% வரி என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
புதிய வரி வசூல் முறை அறிமுகமானாலும் பழைய முறையில் வருமான வரி செலுத்தவும் மக்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பழைய முறை 2025-26 அடுத்த நிதியாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே அதனோடு புதிய வரி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை வருமான வரி குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஈட்டுவோரிடமிருந்து கிடைக்கிறது.
எனவே ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி குறைப்பு செய்வதால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருப்பு அதிகரித்து நுகர்வு வருவாயை அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.