இந்தியா

சிங்கத்தை விரட்டியடித்த காட்டெருமை- வீடியோ வைரல்

Published On 2024-12-28 01:59 GMT   |   Update On 2024-12-28 01:59 GMT
  • ஒரு சிங்கம், காட்டெருமையை இரையாக்கிக் கொள்ள, அதன் தலையைப் பிடித்து தொங்கியபடி கழுத்தை கவ்வ முயற்சிக்கிறது.
  • காட்டெருமையின் ஆக்ரோஷமான காட்சி வலைத்தளவாசிகளால் அதிகம் ரசிக்கப்பட்டு வைரலானது.

காட்டின் ராஜாவாக கருதப்படுவது சிங்கம். அதன் கர்ஜனையை கேட்டாலே மற்ற விலங்குகள் தப்பிப் பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க ஓடும். சிங்கத்திடம் இரையாக நேரிடும் சமயங்களில் பல விலங்குகள் அதை எதிர்த்துப் போராடி இருக்கின்றன. அதுபோல காட்டெருமை ஒன்று சிங்கத்தை எதிர்கொண்டு விரட்டியடித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

வீடியோவில், ஒரு சிங்கம், காட்டெருமையை இரையாக்கிக் கொள்ள, அதன் தலையைப் பிடித்து தொங்கியபடி கழுத்தை கவ்வ முயற்சிக்கிறது. அப்போது காலடியில் சிக்கிய சிங்கத்தை, கால்களால் அசுர பலத்துடன் எட்டி உதைத்து, சிங்கத்தின் பிடியை தளர்த்த ஓட வைக்கிறது எருமை. அப்படியே அதை ஓட ஓட துரத்துவதுடன் வீடியோ முடிவடைகிறது. காட்டெருமையின் ஆக்ரோஷமான காட்சி வலைத்தளவாசிகளால் அதிகம் ரசிக்கப்பட்டு வைரலானது.



Tags:    

Similar News